India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை ராணிப்பேட்டை, வேலூர், தேனி, தென்காசி, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை & குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 5) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு, கட்டணம் தொடர்பான பிரச்னைகள், சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணலாம். நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை Executive Engineer/O&M அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். #SHAREIT
ஹர்திக் பாண்டியாவின் MI, ரிஷப் பண்ட்டின் LSG ஆகிய அணிகள் சற்று நேரத்தில் களமிறங்க உள்ளன. இவ்விரு அணிகளும் இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி தலா 1 வெற்றியை பதிவு செய்துள்ளன. 2-வது வெற்றியை பெற இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும். நேருக்குநேர் மோதிய 6 போட்டிகளில் LSG 5 முறையும், MI 1 முறையும் வென்றுள்ளன. இன்று வெல்லப் போவது யார்?
ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடுபவர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், நள்ளிரவு 12- அதிகாலை 5 மணி வரை விளையாடக் கூடாது என அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு பாதிப்பு ஏற்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று சுமார் $6 டாலர்கள் சரிந்த Brent கச்சா எண்ணெய், $64.22 டாலர்களுக்கு விற்பனையாகிறது. 2022ஆம் ஆண்டில், கச்சா எண்ணெய் $110 டாலருக்கு மேல் விற்றபோது இந்தியாவில் பெட்ரோல் விலை சற்று ஏறக்குறைய ₹100ஆக இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் $65க்கு விற்கும்போதும் பெட்ரோல் விலை ₹100ஆகவே உள்ளது.
ரஜினியின் கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினி விசில் அடிப்பது போன்ற புதிய போஸ்டரை வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலி படத்துக்கு யாரெல்லாம் வெய்ட்டிங்?
தமிழக மீனவர்கள் 11 பேரை நிபந்தனையின்றி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி கடந்த 27ஆம் தேதி இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்தனர். பிரதமர் மோடி தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு செல்லவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ், மலையாள மொழிப் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரவிக்குமார், இன்று சென்னையில் காலமானார். கமல் – ரஜினி நடித்த ‘அவர்கள்’ படத்தில், இவரின் கேரக்டர் ரசிகர்களை ஈர்க்க, அதன்பின் ‘அவர்கள்’ ரவிக்குமார் என்பதே இவரின் பெயரானது. யூத், ரமணா, லேசா லேசா, விசில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP!
அன்றாட வாழ்க்கையில், நாம் எத்தனையோ பேருடன் பழகுகிறோம். ஆனால், எல்லோருடனும் நம்மால் நட்புறவுடன் இருக்க முடியுமா? கஷ்டம் தான். அப்படியே இருந்தாலும், சிலரே நமக்கு பிடித்தவர்களாக இருக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு சிலரை, நமக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அவர்களிடம் உள்ள ஏதோ ஒரு அம்சம் அதற்கு காரணமாக இருக்கலாம். அப்படி ஒருவரிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் என்றால், எதை கூறுவீர்கள்?
கச்சத்தீவு மீண்டும் நமக்கு சொந்தமாவது மட்டும்தான் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே பரிகாரம், தீர்வு என விஜய் தெரிவித்துள்ளார். திமுகவின் ஆட்சி அதிகார பசியால் கச்சத்தீவு கைவிட்டு போனதாக குற்றம் சாட்டிய அவர், நிரந்தர தீர்வு எட்டும்வரை 99 வருட குத்தகையாக கச்சத்தீவை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை செல்லும் PM மோடி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.