India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவிஷீல்டு தடுப்பூசி சில நேரங்களில் ரத்தம் உறைதல் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துமென அஸ்ட்ராஜெனெகா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில், ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கி கோவிஷீல்டு தடுப்பூசியை விநியோகித்தன. கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, அஸ்ட்ராஜெனெகா இதனைத் தெரிவித்தது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவில், மோசடியாகப் போலி விரல்கள் பயன்படுத்தப்படுவதாக ‘ஓட்டுப் போடுவதற்கு போலி விரல்கள்’ என தலைப்பில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. ஆனால், இது உண்மையல்ல. 2013ஆம் ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், ஜப்பானைச் சேர்ந்த யாகுசா என்ற குழுவின் முன்னாள் உறுப்பினர்கள், தங்களது கைவிரல் ஊனத்தை மறைக்க, செயற்கையாக விரலைப் பயன்படுத்துவதை குறிக்கிறது.

ஐபிஎல் தொடரின் 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்த DC அணி முதலில் அதிரடி காட்டினாலும், பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்களில் 153/9 ரன்களை எடுத்தது. அதிகப்பட்சமாக குல்தீப் 34, பந்த் 27 ரன்கள் எடுத்தனர். KKR தரப்பில் வருண் 3 விக்கெட்டும், ராணா, அரோரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மதுரை, புதுக்கோட்டையில் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் மதுரை, புதுக்கோட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2 கட்டத் தேர்தலிலும் பாஜகவின் தோல்வி உறுதியான நிலையில், மீதமுள்ள 5 கட்டத் தேர்தலிலும் பாஜக தோல்வி அடையும் என்றார். தேர்தல் வரும்போதெல்லாம் பாஜகவினர் விசயத்தைப் பயன்படுத்துவர் எனக் கூறிய அவர், இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகப் பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த முறையை ஒழித்து, இயந்திரங்களை பயன்படுத்துமாறு தமிழக அரசுக்கு யோசனைக் கூறிய கோர்ட், பாதாள சாக்கடையில் இறங்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டை 3 ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தவும், சுத்தம் செய்யும் போது பலியாவோரின் குடும்பத்திற்கு கருணை வேலை வழங்க வேண்டும் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் வலுவான தொடக்கம் தரவில்லை. இருப்பினும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரிஷப் பந்த் 27 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். தற்போது டெல்லி அணி 12 ஓவர் முடிவில், 99 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஆசையில் பிரதமர் மோடி நாட்டு மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்துவதாக சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மோடியின் பரப்புரை குறித்துத் தேர்தல் ஆணையம் வரை புகார் அளிக்கப்பட்டும் தனது வெறிபிடித்த பரப்புரையைப் பிரதமர் மாற்றிக் கொள்ளாதது கண்டனத்துக்குரியது என்ற அவர், இதற்கான பதிலடியைத் தேர்தல் முடிவில் மோடி நிச்சயம் அனுபவிப்பார் என்றும் கூறினார்.

கேரளாவில் பரவிவரும் பறவைக் காய்ச்சலால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த பறவைகள், விலங்குகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, வேகவைக்கப்படாத, குறைவாக வேகவைக்கப்பட்ட இறைச்சி உணவுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

‘உறியடி’, ‘பைட் கிளப்’ படங்களைத் தொடர்ந்து விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ படம் மே 17ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் இயக்கியுள்ள இப்படத்துக்குக் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘எலெக்சன்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.