India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2ஆவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற 120 ரன்களை வங்கதேச மகளிர் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. சில்ஹெட்டில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஏற்கெனவே முதல் போட்டியில் வென்ற இந்திய மகளிர் அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திய சிலருக்கு த்ரோம்போசைட்டோபீனியா நோய் அறிகுறி ஏற்படலாம் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரத்தம் உறைவதோடு பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறைவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கடுமையான தலைவலி, வயிற்று வலி, கால்களில் வீக்கம், மயக்கம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோரைப் பாயில் தூங்குவதால், பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன? 1) பாய்க்கு உடல் சூட்டை உள்வாங்கும் தன்மை உள்ளதால், ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும் 2) உடல் சோர்வாகவும், மந்தமாகவும் உணர்பவர்கள் பாயில் படுத்து எழுந்தால் சோர்வு நீங்குவதாகச் சொல்லப்படுகிறது 3) கர்ப்பிணிகள் பாயில் உறங்கினால், முதுகு வலி, இடுப்பு வலி வராது 4) குழந்தையைப் பாயில் படுக்க வைத்தால், முதுகெலும்பைச் சீர்ப்படுத்தும்.

இந்தியாவின் முக்கிய எட்டுத் துறைகளின் உற்பத்தி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், மார்ச்சில் 5.2%ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, நிலக்கரி (8.7%), கச்சா எண்ணெய் (2%), சிமெண்ட் (10.6%), உருக்கு (5.5%), மின்சாரம்(8%), இயற்கை எரிவாயு (6.3%), உரம் (1.3%) ஆகியவை வளர்ச்சி கண்டுள்ளன. நாட்டின் மொத்த உற்பத்தியில் இந்தத் துறைகள் மட்டும் 40.27% பங்கைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடியை கைது செய்ய வேண்டும் என்று X தளத்தில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. தங்களுடைய தடுப்பூசி ரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம் என்று AstraZeneca நிறுவனம் நேற்று ஒப்புக் கொண்டது. இந்நிலையில், இந்தியாவில் Serum நிறுவனத்திடம் ₹52 கோடி நன்கொடை பெற்றுக் கொண்டு பாஜக அரசு கோவிஷீல்டு தடுப்பூசியை அனுமதித்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிப்பதற்கு வானில் மேகக் கூட்டங்கள் இல்லாததே காரணம் என்று வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், வானில் மேகக் கூட்டங்கள் இருந்தால்தான், சூரியனில் இருந்து வரும் வெப்பத்தைத் தடுக்கும் என்றும், இல்லையெனில் வெப்பம் அப்படியே பூமியைத் தாக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் வெப்பஅலை வீசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1ஆம் தேதி நடத்தக் கூடாதென பாமக தலைவர் ராமதாஸ் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவை அடுத்து, ஏப்.8ஆம் தேதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், வெப்ப அலை வீசும் ஜூன் மாதம் இடைத்தேர்தலை நடத்த சரியான நேரம் அல்ல. வெப்பம் தணிந்த பின் தேர்தலை நடத்தலாமென்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியில் பார்பி படத்தில் நடித்த பிறகு, எந்த வாய்ப்பும் தனக்குக் கிடைக்கவில்லை என நடிகை இலியானா வேதனை தெரிவித்துள்ளார். பார்பி படத்தில் நடித்ததை வைத்து, தாம் இந்திக்குச் சென்று விட்டதாகவோ, தென்னிந்திய படங்களில் நடிக்கப் போவதில்லை என்றோ அர்த்தமில்லை என்று கூறியுள்ளார். ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதாகவும், ஆனால் அது கவனிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணைத் தாக்கியது தொடர்பாக டெல்லி அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷாவுக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான விடுதியில் பிருத்வி ஷாவும், அவரது நண்பர் ஆஷிஷ் யாதவும் தன்னை பேட்டால் தாக்கியதாக சப்னா கில் என்ற பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிய மறுத்ததையடுத்து, நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த கோர்ட், ஜூன் 6ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தன. இந்த வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Sorry, no posts matched your criteria.