news

News April 5, 2025

உருவாகிறது ‘புதிய மதம்’

image

உலகில் வாழும் 3 மதங்களை இணைத்து ஒரே மதமாக உருவாக்கும் முயற்சி நடந்து வருதாக இமாம் அமைப்பின் தலைவர் இலியாஸி தெரிவித்துள்ளார். முஸ்லிம், யூதர், கிறிஸ்தவர்களை கொண்டு ‘நம்பிக்கை’ என்ற புதிய மதம் உருவாக்கப்படும். 3 மதங்களுக்கும் ஒரே ஆதாரம் ஒரே மூலம்தான். வழிபாட்டு முறைகள் நிச்சயமாக வேறுபட்டவை; ஆனால் அனைத்தும் ஒன்றுதான். இறைவன் ஒருவனே! என்பது முக்கிய கொள்கை. இதனால் மோதல்கள் குறையும் எனக் கூறியுள்ளார்.

News April 5, 2025

வேகமாக பரவும் தக்காளி காய்ச்சல்

image

மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளி காய்ச்சல் பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார். இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. முதலில் தொண்டை வலி ஏற்பட்டு, ஓரிரு நாள்களில் காய்ச்சலாகவும், பின்னர் கை, கால் பாதங்களில் கொப்புளங்கள், அரிப்புடன் சிவப்பு நிறத்தில் மாறுதல் போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு மூட்டு வலி, உடல் வலி, நீரிழப்பு உள்ளிட்டவையும் ஏற்படுகின்றன.

News April 5, 2025

தக்காளி காய்ச்சலை தவிர்க்க சுகாதாரம் அவசியம்

image

தக்காளி காய்ச்சல் சுகாதாரமின்மையால் பரவுகிறது. எனவே, எப்போதும் குழந்தைகள், பெரியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது மிக அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம். இந்த காய்ச்சல் ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் உடனே சிகிச்சை பெறவும். இத்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பு வைக்கக்கூடாது.

News April 5, 2025

காலை சோர்வை விரட்டும் நச் ‘3’ டிப்ஸ்!!

image

*கொஞ்சம் நீரிழப்பு ஏற்பட்டாலும் அன்றைய நாள் முழுவதுமே சோம்பலாகவே இருந்துவிடும். ஆகையால் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள் *சூரிய ஒளி காலையில் பெறுவது வைட்டமின் டி கிடைக்க உதவும். சூரிய ஒளி மூளையில் செரோடோனின் அதிகரிக்க உதவுகிறது *குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதால், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

News April 5, 2025

உடைந்து போன ஹர்திக்..!

image

ஹர்திக் நேற்று அணியை சரியாக வழிநடத்தவில்லை என சில MI ஃபேன்ஸ் விமர்சிக்கின்றனர். அதேநேரம், பவுலிங்கில் 5 விக்கெட், பேட்டிங்கில் 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 28 ரன்கள் என தனது பங்கை சரியாகவே செய்திருக்கிறார். ஆனாலும், டீம் தோற்று விட்டதை அவர் பொறுத்துக் கொள்ள முடியாமல், கண்ணீர்விட்ட காட்சி வைரலாகி வருகிறது. MI அணியின் தோல்விக்க்கு என்ன காரணம்?

News April 5, 2025

Week-endல ரொம்ப நேரம் தூங்குறீங்களா? இத கவனியுங்க

image

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற போதிலும், வேலை பளுவால் தூக்கம் பாதிக்கிறது. குறைவான தூக்கம் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்னைக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, Week-endல் அதிக நேரம் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, இனி Weekendல் நைட் ஃபுல்லா ஊற் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, நல்லா தூங்கி மார்னிங் லேட்டாக எழுந்துக்கோங்க!

News April 5, 2025

அண்ணாமலையின் அடுத்த திட்டம்?

image

பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் தான் இல்லை என அண்ணாமலை கூறிய பிறகு, அடுத்தது என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு மத்தியில் இணையமைச்சர் பதவி வழங்கத் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், நான் டெல்லி செல்ல மாட்டேன் தமிழகத்திலேயே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். இதனிடையே மோடி நாளை தமிழகம் வந்து சென்றபிறகு ரஜினி பாணியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் செல்ல உள்ளாராம்.

News April 5, 2025

‘ஜனநாயகன்’ படத்திற்கு மே 15 டார்கெட்

image

‘ஜனநாயகன்’ ஷூட்டிங்கை மே 15ஆம் தேதிக்குள் முடிக்க இயக்குநர் எச்.வினோத் திட்டமிட்டுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தயாராகும் வினோத், அதையடுத்து பாடல் காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், ஜூன் மாதம் முதல் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுகிறார். தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 5, 2025

இன்று தேசிய கடல்சார் தினம்…

image

தேசிய கடல்சார் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றும் கடல்சார் துறையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதி கடல்சார் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1919ல் இதே நாளில் தான் இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்றது. அதன் நினைவாக 1964 முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

News April 5, 2025

BJP புதிய தலைவர் யார்?.. ரேஸில் முந்திய நயினார்

image

பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை; யாரையும் பரிந்துரையும் செய்யவில்லை என அண்ணாமலை கூறிவிட்டார். இதன் மூலம், நயினார் நாகேந்திரன்தான் புதிய தலைவர் என்றும், இதுதான் அதிமுகவின் விருப்பமும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நயினாருக்கு பதிலாக தனது ஆதரவாளரான கருப்பு முருகானந்தத்தை அண்ணாமலை பரிந்துரை செய்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

error: Content is protected !!