India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொரோனா தடுப்பூசி போடுகையில் அளிக்கப்படும் கோவின் சான்றிதழ்களில் இருந்து மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவோருக்கு அளிக்கப்படும் அந்த சான்றிதழில் மோடி படத்துடன் ‘இந்தியா ஒன்றிணைந்து கொரோனா-2019ஐ தோற்கடிக்கும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. தற்போது, அந்த வாசகம் மட்டும் சான்றிதழில் உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுவது, நிம்மதியான தூக்கம், போதுமான தூக்கம் ஆகியவை இருதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொதுவாக மனிதர்களுக்கு 8 மணி நேர தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு 10 முதல் காலை 6 மணி வரை தினமும் முறையாக கடைபிடித்தால் பெரும்பாலான நோய்களில் இருந்து விடுபடலாம் என்கிறது ஆய்வு. நீங்கள் முறையாகத் தூங்குகிறீர்களா?

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மிகப்பொறுமையாக பேட்டிங் செய்துவரும் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகள் சரியத் தொடங்கியதால் பொறுமையாக ஆடிவந்த அவர், 44 பந்துகளில் 55* ரன்கள் அடித்துள்ளார். தற்போது, CSK 16.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. இன்று CSK எவ்வளவு ரன்கள் எடுக்கும்.?

நாடு பிரச்னைகளை சந்திக்கும் நேரத்தில் எல்லாம் இத்தாலிக்கு ராகுல் முதல் ஆளாக ஓடி விடுவார் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாட்டில் கொரோனா பரவியபோது, இத்தாலிக்கு ராகுல் ஓடி விட்டதாகவும், நிலநடுக்கம், வெள்ளம் ஏற்பட்டபோதும் இத்தாலிக்கு சென்று விட்டதாகவும் கூறினார். வெளிநாட்டில் இருக்கும்போது கூட இந்தியாவை ராகுல் விமர்சிப்பதாக அவர் தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன். விஜய்யை வைத்து பீஸ்ட், ரஜினியை வைத்து ஜெயிலர் படங்களை இயக்கிய இவர், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார். ‘ஃபிளமண்ட் பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதை அறிவித்துள்ள அவர், மே 3 ஆம் தேதி தான் தயாரிக்கும் முதல் படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ், ரஹானே பொறுமையாக ஆடிவந்தனர். ஒன்பதாவது ஓவரின் முதல் பந்தில் ரஹானே ஆட்டமிழந்தார். பின்னர் அதே ஓவரில் 3ஆவது பந்தில் தூபே ரன்கள் ஏதும் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜா(2) LBW முறையில் ஆட்டமிழந்தார். CSK 10 ஓவரில் 71/3 ரன்கள் எடுத்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு உடன்படாத காரியங்களில் அவர் ஈடுபட்டதால் அவர் வெளியேற்றப்படுவதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கொல்கத்தா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் தபஸ் ராயுடன் குணால் கோஷ் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, அவரைப் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என மம்தா தெரிவித்துள்ளார். முதல் 2 கட்ட வாக்கு விகிதம் திடீரென உயர்ந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பாக சந்தேகம் எழுப்பிய அவர், தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றா? என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார். மே.வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஏப்ரல் மாதம் 12% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் அதன் பயன்பாடு 2.67 மில்லியன் டன்னாக இருந்தது. ஆனால், ஏப்ரலில் 2.45 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2023 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 12% உயர்ந்துள்ளது. மேலும், 2020 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 26.9%, கடந்த 2022 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 9% அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மீனம்பாக்கம், கடலூர், தருமபுரி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், தஞ்சை, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் இன்று 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, கரூர் பரமத்தியில் 44 டிகிரி செல்சியஸ் வெயிலால் மக்கள் அவதியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.