news

News May 3, 2024

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்

image

காஸாவில் 7 மாதத்திற்கும் மேலாக போர் நீடித்துவரும் நிலையில், அங்கு கடும் உணவுப் பஞ்சம் நிலவுவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சமீப காலமாக காஸாவிற்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டாலும், அங்கு பஞ்ச நிலை இன்னும் அகலவில்லை எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 10 – 14 கிலோ வரை இருக்கக் கூடிய 2 வயது குழந்தைகள், வெறும் 4 கிலோ எடையில் மட்டுமே இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

News May 3, 2024

வருமான வரி உயரப் போகிறதா?

image

வருமான வரித்திட்டத்தில் பல மாற்றங்கள் வர இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனை தனது X பக்கத்தில் பகிர்ந்திருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது முற்றிலும் தவறான தகவல் என்று மறுத்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் இப்படியான பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் என்று நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம், வருமான வரி உயரப்போவதாக வந்த வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

News May 3, 2024

மும்பை அணியில் அடுத்தடுத்து விக்கெட்

image

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷான் கிஷன் 13, ரோஹித் ஷர்மா 11, நமன் திர் 11, திலக் வர்மா 4 ரன்னிலும் நடையைக் கட்டினர். சூர்யகுமார் 19*, நேஹல் வதேரா 5* ரன்களுடன் ஆடிவருகின்றனர். இன்றைய போட்டியில் மும்பை கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில், முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்ததால் மும்பை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

News May 3, 2024

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி: இழப்பீடு வழங்க உத்தரவு

image

ஏ.ஆர்.ரஹ்மான் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியை பார்க்க கரூரை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வந்திருந்தார். நிகழ்ச்சியை காண முடியாததால், ஊர் திரும்பிய நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் மீது அஸ்வின் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், டிக்கெட் தொகை ₹12 ஆயிரம், இழப்பீடு ₹50 ஆயிரம் உள்பட ₹67,000 வழங்க உத்தரவிட்டது.

News May 3, 2024

வேட்புமனுவை திரும்பப் பெற கட்டாயப்படுத்துகின்றனர்

image

நாடு முழுவதும் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7இல் நடைபெற உள்ளது. இதில் குஜராத்தின் காந்திநகரில் அமித் ஷா போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு எதிராகப் போட்டியிடும் வேட்பாளர்களை, வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு உள்ளூர் பாஜகவினரும், காவல்துறையினரும் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 16 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

News May 3, 2024

பாகிஸ்தானை விட பின்தங்கிய இந்தியா

image

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் கொண்ட பட்டியலில் பாகிஸ்தானை விட இந்தியா பின்தங்கியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 159ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், 152ஆவது இடத்தில் உள்ளது. 2023ஆம் ஆண்டில் 161ஆவது இடத்தில் இந்தியாவும், 150ஆவது இடத்தில் பாகிஸ்தானும் இருந்தன. ஆனால், இந்தாண்டு பாகிஸ்தான் இந்தியாவை விட, 7 இடங்கள் முன்னேறியுள்ளது.

News May 3, 2024

மும்பை வீரர் சாவ்லா புதிய சாதனை

image

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ரிங்கு சிங்கை வீழ்த்தியதன் மூலம் மும்பை அணி வீரர் பியூஸ் சாவ்லா ஐபிஎல்லில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ஐபிஎல்லில் மொத்தம் 184 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சாஹல் (200) முதல் இடத்திலும், CSK முன்னாள் வீரர் பிராவோ (183) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

News May 3, 2024

வட்டியுடன் கடனை செலுத்த நடிகருக்கு உத்தரவு

image

வாங்கிய கடன் ₹50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி அளிக்கும் படி, பிரபல காமெடி நடிகர் யூகி சேதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்ச தந்திரம் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ள யூகி சேது, சென்னை தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ₹50 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால், அதை திரும்ப அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9% வட்டியுடன் திரும்ப செலுத்த ஆணையிட்டது.

News May 3, 2024

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் முதல்வர்

image

நீர் நிலைகளை பாதுகாக்காமல், ஏரி, குளங்களை திமுகவினர் ஆக்கிரமித்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அணைகளை தூர்வாராததால் முழு கொள்ளளவில் நீரைத் தேக்க முடியவில்லை என விமர்சித்த அவர், குழுவை அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாடு பாலைவனமாகும் வரை திமுக காத்திருக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News May 3, 2024

ஈரான், இஸ்ரேல் செல்வோருக்கு மீண்டும் எச்சரிக்கை

image

ஈரான், இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை கருத்தில் கொண்டு, அந்நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களை கவனமாக இருக்கும்படி மத்திய அரசு மீண்டும் எச்சரித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை உற்று கவனித்து வருவதாகவும், 2 நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுவதால், அந்நாடுகளுக்கு செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!