news

News May 4, 2024

ஆடைகளில் உள்ள XL, XXL குறியீட்டுக்கு என்ன அர்த்தம்?

image

ரெடிமேட் சட்டை, சுடிதார், நைட்டியில் XL, XXL என குறிப்பிடப்பட்டு இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். XL எனில் எக்ஸ்ட்ரா லார்ஜ், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதைக் குறிக்கும். அதாவது, XL அளவுள்ள உடை எனில், 42 முதல் 44 இன்ச் வரை இருக்கும். XXL உடைகள் 44 முதல் 46 இன்ச் வரை இருக்கும். S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால் ஆகும்.

News May 4, 2024

ரேபரேலியில் ராகுல் நிச்சயம் தோற்பார்

image

ராகுல் ரேபரேலியில் நிச்சயம் தோற்பார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பேசிய அவர், “அமேதியில் தோல்வி அடைந்து ராகுல் வயநாடு சென்றார். தற்போது வயநாட்டில் தோல்வி அடைவோம் என்பதால் ரேபரேலி வந்துள்ளார். பிரச்னை ராகுலிடம் உள்ளது” என்றார். கடந்த 2019இல் அமேதியில் தோல்வி அடைந்த ராகுல், வயநாட்டில் வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் வயநாடு, ரேபரேலி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

News May 4, 2024

தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

image

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் ரேவண்ணாவின் முன் ஜாமின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அவரை, கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வு பிரி போலீசார் கைது செய்தனர்.

News May 4, 2024

குஜராத் அணி பேட்டிங்

image

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 52ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 4 வெற்றிகளுடன் GT அணி 8ஆவது இடத்திலும், 3 வெற்றிகளுடன் RCB கடைசி இடத்திலும் உள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?

News May 4, 2024

IMPACT PLAYER விதிமுறையை பாராட்டிய ஸ்டார்க்

image

ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் IMPACT PLAYER விதிமுறை இரு அணிகளுக்கும் நியாயமான வாய்ப்பை வழங்குவதாக KKR வீரர் மிட்செல் ஸ்டார்க் பாராட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஒவ்வொரு அணிக்கும் பிளேயிங் லெவனில் ஆழமான பேட்டிங் & பவுலிங் வரிசை கிடைக்கிறது. இருப்பினும், பிட்ச்சின் தன்மை, அளவு போன்றவற்றை பொறுத்து சில நேரங்களில் அது மாறுபடுகிறது” எனத் தெளிவுப்படுத்தியுள்ளார்.

News May 4, 2024

உடல் எடையை குறைக்க விரும்புவோர் கவனத்திற்கு…

image

ராஜ்மாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நார்ச்சத்தானது உடல் எடையை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து, பசி உணர்வை கட்டுப்படுத்தும் என்பதால், நாம் உண்ணும் உணவின் அளவானது குறையும். உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதை முயற்சிக்கலாம். மேலும், உடலுக்கு வலுசேர்க்கும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரோட்டின் ஆகியவை ராஜ்மாவில் அதிகளவில் அடங்கியுள்ளன.

News May 4, 2024

₹1,000 உதவித் தொகை: மீண்டும் வாய்ப்பளிக்குமா அரசு?

image

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் தமிழக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ₹1,000 வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் விண்ணப்பித்தோருக்கு மட்டும் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. வெளியூர் பயணம், உடல்நல பிரச்னை உள்ளிட்ட காரணங்களினால் விண்ணப்பிக்காதோர், புதிதாக திருமணமாகி குடும்ப அட்டை பெற்றோர் தங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News May 4, 2024

வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் சுரைக்காய்

image

சுட்டெரிக்கும் வெயிலால் உடல் சூடு பிரச்னையை பலரும் சந்திக்கின்றனர். இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் ஒன்றான சுரைக்காயை, வாரத்துக்கு 3 நாள்கள் சமையலுக்கு பயன்படுத்தினால், உடல் சூட்டிலிருந்து தப்பிக்க முடியும். கோடை காலத்தில் உடல் சோர்வடையும்போது, சுரைக்காயை சமையலில் சேர்ப்பதால் போதிய ஊட்டச்சத்தை பெற முடியும். கோடை காலத்தில் ஏற்படும் அலர்ஜி பிரச்னைகளில் இருந்தும் தப்பலாம்.

News May 4, 2024

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புது படத்தின் அப்டேட் வெளியீடு

image

விஜய் தேவரகொண்டாவின் 14ஆவது படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரின் புதிய படத்தை, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, ரவி கிரண் கோலா இயக்க உள்ளார். இந்தப் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் பேமலி ஸ்டார் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில், அந்தப் படத்தையும் தில் ராஜு தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 4, 2024

இஸ்ரேலுடன் வர்த்தகம் செய்யமாட்டோம்

image

காஸாவில் மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்க இஸ்ரேல் அனுமதிக்கும்வரை, அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யமாட்டோம் என்று துருக்கி அதிபர் எர்துவான் அறிவித்துள்ளார். பாலஸ்தீன மக்கள் அதிகளவில் வாழும் காஸாவில் மீதான தாக்குதலைக் கண்டித்து, இஸ்ரேல் ஏற்றுமதிக்கு துருக்கி கடந்த மாதம் பல கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே 7 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!