news

News May 4, 2024

பூமிக்கு அருகில் வரும் 2 விண்கற்கள்

image

பூமிக்கு மிக அருகில் இன்று HK1, 2024 JE என்ற பெயர்களைக் கொண்ட 2 விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 99 அடி நீளம் கொண்ட HK1 விண்கல், மணிக்கு 31,114 கி.மீ., வேகத்திலும், 165 அடி நீளம் கொண்ட 2024 JE விண்கல் மணிக்கு 27,926 கி.மீ., வேகத்திலும் பூமியை இன்று கடந்து செல்கின்றன. இதனால் ஆபத்து இல்லை என்றாலும், விண்கற்களை கண்காணித்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

News May 4, 2024

எங்கள் சகோதரிகளிடம் இருந்து தாலியைப் பறிப்போமா?

image

நாட்டில் இஸ்லாமியர்களுக்கு அச்சம் நிறைந்த சூழல் நிலவி வருவதாக ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்தியில் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்துகளிடையே மோடி வெறுப்புணர்வைத் தூண்டுகிறார். எங்கள் சகோதரிகளிடம் இருந்து தாலியைப் பறிக்கும் அளவுக்கு நாங்கள் கீழ்த்தரமானவர்கள் அல்ல” என ஆவேசமாகக் கூறியுள்ளார்.

News May 4, 2024

ஓடிடி பிசினஸில் வீழ்ச்சியைச் சந்திக்கும் தமிழ் திரையுலகம்

image

ஹாலிவுட்டை தொடர்ந்து, ஓடிடி & சாட்டிலைட் பிசினஸில் தமிழ் திரையுலகம் சமீபகாலமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இதனால், தமிழில் மட்டும் 40க்கும் மேற்பட்ட படங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. இதற்கான தீர்வை ஏற்படுத்த, ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முயற்சி எடுத்தது. ஆனால், அதற்கு நஷ்டக் கணக்கைக் காட்டும் ஓடிடி நிறுவனங்கள், உடன்பட மறுப்பதாகக் கூறப்படுகிறது.

News May 4, 2024

பிரஜ்வால் வீட்டிற்கு சென்ற சிறப்பு புலனாய்வு குழு

image

பிரஜ்வால் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கர்நாடக எம்.பி பிரஜ்வால் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், அவர் வெளிநாட்டில் தலைமறைவானார். அவரின் மீதான புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர், பிரஜ்வாலை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், அவரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

News May 4, 2024

பெண்ணை அறைந்தது ஏன்? காங்., வேட்பாளர் விளக்கம்

image

பெண்ணை கன்னத்தில் அறைந்தது ஏன்? என்பது குறித்து தெலங்கானாவின் நிஜாமாபாத் காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி விளக்கமளித்துள்ளார். பெண்ணை அவர் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்து பேட்டியளித்தார். அப்போது, அந்தப் பெண்ணை தாம் கோபத்துடன் அடிக்கவில்லை என்றும், அன்புடனேயே கன்னத்தில் லேசாக தட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 – 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

குஜராத்தில் இருந்து உ.பி.,க்கு தப்பி ஓடிவந்தவர் மோடி

image

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாதது குறித்து விமர்சிக்க பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். மோடி ஏன் குஜராத்தில் இருந்து வந்து வாரணாசியில் போட்டியிடுகிறார் என கேள்வி எழுப்பிய அவர், அவரே உ.பி.,க்கு தப்பி ஓடிவந்தவர்தான் என்றார். தற்போது, தோல்வி பயத்தில் இருக்கும் அவர், பொய்யை மட்டுமே பேசிவருகிறார் எனக் கூறியுள்ளார்.

News May 4, 2024

மாலையில் விளக்கேற்றுவதால் வரும் நன்மை

image

விளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தினமும் மாலை 6 மணி அளவில் (சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு) வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட வேண்டும். அதன் பின்னர், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி, திருவிளக்கு மந்திரம் பாடி, பால் நிவேதனம் செய்து வழிபட திருமணத்தடை, சுபகாரியத்தடை, கல்வித்தடை நீங்குவதோடு சர்வ மங்கலமும் உண்டாகும் என்பது ஐதீகம்.

News May 4, 2024

புதிய படத்தில் ஞானவேலுவுடன் இணையும் நானி

image

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் சூட்டிங் விரைவில் முடிவடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். வேட்டையன் படத்துக்கு முன்பு நானியை சந்தித்து அவர் கதை கூறியதாகவும், அது நானிக்கு மிகவும் பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஞானவேல்-நானி கூட்டணியில் புதிய படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.

News May 4, 2024

சந்தைக்கு வந்தது யமஹா ஏரோக்ஸ் எஸ்

image

மேக்ஸி ஸ்கூட்டர்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடல் ஏரோக்ஸ். இப்போது, அதன் எஸ் மாடலை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சில்வர் & ரேசிங் நீல நிறத்தில் அறிமுகமாகியுள்ள இந்த இரண்டாம் தலைமுறை மாடலின் விலை ரூ.1.51 லட்சமாகும். ஓ.பி.டி. சிஸ்டம் 2, டிராக்‌ஷன் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகளை கொண்ட இதனை, சென்சார் நுட்பத்தால் உரிமையாளர் சாவியின்றி, வெறுமனே பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்ய முடியும்.

error: Content is protected !!