news

News May 20, 2024

பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.73% வாக்குப்பதிவு

image

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, தோராயமாக 36.73% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பிஹார் – 34.62%, ஜம்மு காஷ்மீர் – 34.79%, ஜார்கண்ட் – 41.89%, லடாக் – 52.02%, மகாராஷ்டிரா – 27.78%, ஒடிஷா – 35.31%, மேற்கு வங்கம் – 48.41%, உ.பி. – 39.55% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

News May 20, 2024

போயிங் நிறுவனத்துக்கு சீனா பொருளாதாரத் தடை

image

சீனா, அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவுகிறது. அண்மையில் சீனாவின் பல்வேறு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போயிங் விமான நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு அந்நாடு பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவும், அந்நிறுவன அதிகாரிகள் சீனாவுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள் (3)

image

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மகன் அர்ஜுனுடன் சென்று வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து நடிகைகள் ஹன்சிகா, தீபிகா படுகோன், ஸ்ரேயா, நக்மா, ஈஷா தியோல், கஜோல், வித்யா பாலன், ரன்வீர் சிங், அனுபம் கெர் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

News May 20, 2024

கோவாக்சின் ஆய்வறிக்கையை திரும்பப் பெற உத்தரவு

image

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 30% பேர் பக்க விளைவுகளை சந்திப்பதாக பனாரஸ் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது. இதனை உடனடியாக திரும்பப் பெற ஐசிஎம்ஆர் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த ஆய்வறிக்கை உண்மைத் தன்மை இல்லாதது என்றும் சரியான தரவுகளைக் கொண்டது இல்லை என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

News May 20, 2024

ஆண் குழந்தைக்கு தாயான நடிகை யாமி கௌதமி

image

பாலிவுட் நடிகை யாமி கௌதமிக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். கௌரவம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்கள் மூலம் தமிழில் பிரபலமான இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கும், கடந்த 10ஆம் தேதி அட்சயதிருதியை அன்று அழகான ஆண் குழந்தை பிறந்ததாகவும், குழந்தைக்கு ‘வேதவித்’ எனப் பெயர் சூட்டியதாகவும் தெரிகிறது.

News May 20, 2024

ஜூலை 3இல் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

image

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கல்லூரியில் சேர இதுவரை 2.18 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 10 – 15 வரை முதல் சுற்று, ஜூன் 24 – 29ஆம் தேதி வரை 2ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறவுள்ளதாகவும், ஜூலை 3ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

News May 20, 2024

வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா

image

பெங்களூருவில் ஸ்மோக்கி பீடா சாப்பிட 12 வயது சிறுமியின் அடிவயிற்றில் துளை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரவ நைட்ரஜன் பான் சாப்பிட்ட சிறுமி வயிற்று வலியால் துடித்தார். அவரது வயிற்றில் துளை விழுந்ததைக் கண்டறிந்த மருத்துவர்கள், 4X5 செ.மீ. வயிற்றுப் பகுதியை வெட்டி அகற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் திரவ நைட்ரஜன் பயன்பாட்டிற்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

image

தமிழ்நாட்டில் மே 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மிக கனமழையும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

image

தென்மேற்கு வங்கக் கடலில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது வடகிழக்காக நகர்ந்து மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 24ஆம் தேதி வரை தமிழகத்தில் கன அல்லது மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

2 மாதங்கள் அவகாசம் கேட்கும் தோனி

image

ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க, சிஎஸ்கே நிர்வாகத்திடம் தோனி 2 மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் முழு ஏலம் நடைபெறவுள்ளது. இதனால், தோனியை தக்க வைப்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தோனியிடம் ஆலோசனை செய்துள்ளது. அப்போது, இரண்டு மாதங்களில் முடிவை தெரிவிப்பதாக தோனி கூறியிருக்கிறார். மீண்டும் விளையாடுவாரா தோனி?

error: Content is protected !!