India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அகமதாபாத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தவும், பாஜக, RSS தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த 4 தீவிரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறுமொழி அவர்களுக்கு தெரியவில்லை. இதனால், தமிழ் தெரிந்த அதிகாரி உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

இடுக்கி மாவட்டம் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கேரள அரசு கட்டுகிறது. கடந்த மூன்று நாள்களாக இந்த விவகாரம் தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அனுமதி பெறவில்லை என்றால், அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக பழுதுபார்க்க வேண்டுமென தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பேருந்துகளில் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டாமல் கடனாக வாங்கிய ₹3.5 லட்சம் கோடியில் புதிய பேருந்துகளை உடனடியாக வாங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு காபி விலை ₹190 என்று அச்சிடப்பட்ட மெனு கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இயங்கும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலின் மெனு கார்டுதான் இது. விமான நிலையத்திற்குள் இடத்திற்கான வாடகை அதிகம் என்பதால் உணவகங்கள் அதிக விலையை நிர்ணயிப்பது வழக்கம்தான். ஆனால், தயிர்சாதம் ₹290, இட்லி ₹270, சப்பாத்தி ₹350, பொங்கல் ₹290 என்ற விலை காண்போரை மலைக்க வைக்கிறது.

தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு கடந்த 5 நாள்களில் (மே 16 -20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், சொகுசு காரை மது போதையில் சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஓட்டி, இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் 15 மணி நேரத்தில் ஜாமின் பெற்றது சர்ச்சையானது. இந்நிலையில், அச்சிறுவனின் தந்தையை போலீசார் அவுரங்காபாத்தில் கைது செய்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக் கடையின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் பிரபலமான அனிகா, மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாவதுடன் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தனது ஆடை குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர், கவர்ச்சியான உடைகள் அணிவது தனது தனிப்பட்ட விருப்பம் எனவும், சினிமாவில் இருக்கும் பெண்கள்தான் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

1 – 5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 37,866 பள்ளிகளில் 22.27 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவதாகவும், ஆங்கிலம் வாசிப்பதை அதிகரிக்க பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீ., என மழை பதிவாகியுள்ளது.

5ஜி ஏலத்திற்கான இறுதிக்கட்ட ஏலதாரர்களின் பட்டியலை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல்வேறு பேண்ட் பிரிவுகளில் பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, ஜியோ ஆகியவை ₹96,317.65 கோடி மதிப்பிலான 10,523.15 MHz அளவிலான 5ஜி அலைக்கற்றையைப் பெற இறுதி ஏலதாரர்களாக தேர்வாகியுள்ளனர். இதில், ஜியோ ₹3,000 கோடி, ஏர்டெல் ₹1,050 கோடி, வோடாபோன் ஐடியா ₹300 கோடி முன் வைப்புத் தொகை செலுத்த முன் வந்துள்ளன.
Sorry, no posts matched your criteria.