India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶ எண்: 9
▶குறள்:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
▶பொருள்: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலை ஏற்படுமோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனுக்கும் ஏற்படும்.

யானைகள் வழித்தடம் தொடர்பாக கருத்துக்களை அறிய விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்களின் அச்சத்தைப் போக்க கருத்துக் கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர், வன உரிமை அங்கீகார சட்டம் 2006 மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.7% அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2022-23-ஆம் நிதியாண்டில் 24.91 டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி இறக்குமதி 26.82 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடல்வழி சரக்குக் கட்டணம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் நிலக்கரி இறக்குமதி அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இன்று (மே 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

தைவானை மிரட்டுவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் புதிய அதிபர் வில்லியம் லாய் எச்சரித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பேசிய அவர், “சீனாவின் ராணுவ அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். தைவானின் ஜனநாயகத்தை சீனா ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் கான சீனா முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார். ராணுவ அழுத்தம் மூலம் தைவானை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.

எல்லோரும் கூறுவதுபோல இசைத்துறையில், தான் அப்படி ஒன்றும் சாதித்து விடவில்லை என்று இளையராஜா தன்னடக்கத்தோடு கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில் பேசிய அவர், “கிராமத்தில் இருந்து எப்படி வந்தேனோ, அப்படியேதான் இன்றும் இருக்கிறேன். இசையை முறையாகக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தால்தான் சென்னைக்கு வந்தேன். ஆனால், இதுநாள் வரைக்கும் அதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியவில்லை” எனக் கூறினார்.

முதல் ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியா அணி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. பாங்காக்கில் 4×400 கலப்பு அணிகள் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், மின்னல் வேகத்தில் ஓடிய அஜ்மல், ஜோதிகா ஸ்ரீ, அமோஜ் ஜேக்கப் & சுபா வெங்கடேசன் ஆகிய நால்வர் பந்தயத் தூரத்தை 3 நிமிடம் 14.12 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து, வெற்றி பெற்றனர். இலங்கை & வியட்நாம் அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

அரசியலமைப்புச் சட்டத்தை காக்க INDIA கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இணைய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். கன்னௌஜில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளாக தொழிலதிபர்கள், விவசாயிகள், இளைஞர்கள், சிறுபான்மையினரிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டி வந்துள்ளது. 140 இடங்களில்கூட வெல்ல முடியாத நிலைக்கு பாஜகவை மக்கள் தள்ளுவார்கள்” என்றார்.

இன்று (மே 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

*தேர்தலில் பிரமாண்ட எண்ணிக்கையில் வென்று, பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் – மோடி
*காவிரி தீர்ப்பினை மீறும் கர்நாடக அரசை உறுதியோடு எதிர்ப்போம் – துரைமுருகன்
*நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று நேபாளம் பிரதமர் பிரசண்டா அரசு ஆட்சியைத் தக்கவைத்தது.
*இந்திய வங்கித் துறையின் நிகர லாபம் ₹3 லட்சம் கோடியைத் தாண்டியது.
*கிராண்ட் பிரிக்ஸ் ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மர் தங்கம் வென்றார்.
Sorry, no posts matched your criteria.