news

News May 21, 2024

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்

image

‘G.O.A.T’ படத்திற்கான VFX பணிகளை முடித்துவிட்டு, நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதால், இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம், 10, +2 வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விஜய்யின் டப்பிங் பணிகள் 50% முடிந்துவிட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பும் நிறைவுபெற உள்ளது.

News May 21, 2024

செல்லூர் ராஜூவுக்கு நன்றி சொன்ன காங்கிரஸ் எம்.பி

image

ராகுல் காந்தியை புகழ்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜூ பகிர்ந்த வீடியோவை பதிவிட்டு ‘அண்ணனுக்கு நன்றி’ என அவர் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராகுலை செல்லூர் ராஜூ புகழ்ந்தது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பிய நிலையில், சாதாரணமாகவே ராகுலை பாராட்டியதாக அவர் விளக்கமளித்திருந்தார்.

News May 21, 2024

3ஆவது முறை கோப்பையை கைப்பற்றிய MI

image

2017ஆம் ஆண்டு இதே நாளில், மும்பை அணி 3ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. புனே அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், முதலில் ஆடிய MI அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய புனே அணி, மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது, அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஜான்சன் 1 ரன் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்தார்.

News May 21, 2024

பரப்புரை செய்ய ஜாமின் கேட்கும் ஹேமந்த் சோரன்

image

இடைக்கால ஜாமின் கோரி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் ED அதிகாரிகளால் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கெஜ்ரிவால் போன்று தானும் பரப்புரையில் ஈடுபட இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, நாளை விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

News May 21, 2024

தமிழகத்தில் பரவலாக மழை

image

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, தருமபுரி மாவட்டங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ஏற்கெனவே இன்று கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

நடிகர் சூரி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

image

காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களால் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்றும், ஆனால், காமெடி நடிகர்களால் எவ்வளவு சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், நடிகர் சூரி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என பாராட்டினார்.

News May 21, 2024

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்

image

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளாா். பாஜகவை போல் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என்று கூறவில்லை என்ற அவர், அந்த எண்ணிக்கை அதிகபட்சமாக 20 இடங்களாக கூட அதிகரிக்கலாம் என்றார். கர்நாடகாவில் 28 தொகுதிகள் உள்ள நிலையில், 2019 தேர்தலில் பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றது.

News May 21, 2024

ஸ்டாலின் ஆட்சியில் கல்வித்துறை சாதனை

image

கல்வித்துறையில் தமிழ்நாடு தலை சிறந்து விளங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வரின் ஆட்சியில் ₹600 கோடியில் காலை உணவுத் திட்டம், ₹436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ₹590 கோடியில் இல்லம் தேடி கல்வித் திட்டம், ₹101 கோடியில் ஆசிரியர்களுக்கு டேப்லெட், ₹1,887 கோடியில் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

அஜித்தின் ‘விடாமுயற்சி’ தீபாவளிக்கு வெளியீடு?

image

‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை, ஜூன் மாத இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற உள்ளதாகவும், தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள நடிகர் அஜித், விரைவில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News May 21, 2024

ட்விட்டரை விரும்பாத தோனி

image

ட்விட்டரை விட இன்ஸ்டாகிராம் பயன்படுத்தவே அதிகம் விரும்புவதாக CSK வீரர் தோனி கூறியுள்ளார். துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ட்விட்டரில் எந்தவொரு நல்ல விஷயமும் நடந்தது கிடையாது என்றும், ட்விட்டரில் ஏதாவது பதிவிட்டால் அதை பல வகையில் திரித்து சர்ச்சையாக்கி விடுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இன்ஸ்டாவில் ஏதாவது ஒரு வீடியோவை பதிவிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

error: Content is protected !!