news

News April 5, 2025

பஞ்சாபுக்கு 206 ரன்கள் இலக்கு

image

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 206 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது ராஜஸ்தான் அணி. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி, 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் என அனைவரும் அவரவர் பங்கினை சரியாக செய்ய, 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது.

News April 5, 2025

ஏசி விலை விரைவில் உயருகிறது

image

ஏசி விலை 4%-5% வரை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. USA அதிபர் டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு எதிரொலியால், இந்தியாவில் ஏசி தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் காப்பர், ஸ்டீல், அலுமினியம், கேஸ் ஆகியவற்றின் விலை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் செலவினம் அதிகரித்திருப்பதால், அதை ஈடுகட்ட இந்த வாரம் ஏசி விலையை உயர்த்த இருப்பதாக ப்ளு ஸ்டார், ஹையர் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

News April 5, 2025

Retired Hurt vs Retired Out… என்ன வித்தியாசம்?

image

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் திலக் வர்மா Retired Out முறையில் வெளியேறினார். இதற்கும் Retired Hurtக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Retired Hurt என்பது காயத்தால் வெளியேறுவது. சிறிது நேரம் கழித்து அந்த வீரர் மீண்டும் விளையாடலாம். ஆனால், Retired Out சொல்லி வெளியேறினால், அது அவுட் போலத்தான் கணக்கிடப்படும். அந்த வீரர் மீண்டும் பேட்டிங் செய்ய முடியாது.

News April 5, 2025

அதிமுகவை ஒருங்கிணைக்கும் பாஜக?

image

அதிமுக – பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அதிருப்தி தலைவர்களை பாஜக தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் அதிமுக நிர்வாகியான கே.சி.பழனிசாமியை சந்தித்து பேசினார். EPS உடனான எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகியிருக்கும் அவரை நிதியமைச்சர் சந்தித்திருப்பது ஆயிரம் கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது.

News April 5, 2025

மறைந்த நடிகர் ரவிக்குமார் உடல் தகனம்

image

பிரபல நடிகர் ‘அவர்கள்’ <<15989289>>ரவிக்குமார் (71) நேற்று காலமானார்<<>>. சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச்சடங்குக்கு பின், இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தினர். RIP

News April 5, 2025

பிரசாந்திற்கு ஜோடியாகும் புட்ட பொம்மா?

image

மீண்டும் ஹீரோவாக தொடங்கி இருக்கும் பிரஷாந்த், ஹரியுடன் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறாராம். அந்த படத்தில் பிரசாந்திற்கு ஹீரோயினாக நடிக்க பூஜா ஹெக்டே, கயாடு லோகர், சாய் பல்லவி ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஹரி – பிரஷாந்த் கூட்டணியில் ஏற்கனவே ‘தமிழ்’ என்ற ஹிட் படம் வெளிவந்துள்ளது. பிரஷாந்திற்கு யார் கரெக்ட்டான ஹீரோயினாக இருப்பாங்க?

News April 5, 2025

பந்துகளை பறக்க விடும் ஜெய்ஸ்வால்

image

ராஜஸ்தான் – பஞ்சாப் இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அதிரடியாக அரை சதம் கடந்துள்ளார். டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ராஜஸ்தானை பேட்டிங் செய்ய பணித்தார். இதனையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறது. கேப்டன் சஞ்சு சாம்சன் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

News April 5, 2025

செவ்வாய் இடப்பெயர்ச்சி: வீடு, மனை வாங்கும் ராசிக்காரர்கள்

image

ஒருவர் நினைத்த காரியத்தைச் செய்யக்கூடிய உந்துதலையும், ஆற்றலையும் தரும் செவ்வாய் பகவான் கடந்த 3ம் தேதி மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இங்கு ஜூன் 7ஆம் தேதி வரை சஞ்சரிக்க உள்ளார். செவ்வாயின் பெயர்ச்சியால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம் ஆகிய 5 ராசிகளின் வாழ்க்கையில் நன்மைகளும், அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். வீடு, மனை, செல்வம், சொத்துக்கள் மேலும் சேரும்.

News April 5, 2025

தொடர் தோல்வியால் துவண்ட CSK ரசிகர்கள்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் CSK அணி, தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதல் போட்டியில் மும்பை அணியை வெற்றி கண்ட CSK, அடுத்தடுத்து பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. இந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு எழ CSK என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க.

News April 5, 2025

தாக்குதலில் நிரந்தர ஊனம்.. என்ன தண்டனை தெரியுமா?

image

தனிநபர்களுக்கு இடையிலான சண்டை, தாக்குதலில் ஒருவர் நிரந்தர ஊனம் அடைந்தால், என்ன தண்டனை என்பது குறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 117(3)ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கியவருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதுவும், இயற்கையாக இறக்கும் வரை சிறை தண்டனை விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!