India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய ‘சஹானா’ சீரியல் மூலம் அறிமுகமான இவர் ஏராளமான சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ‘வள்ளியின் வேலன்’ சீரியல் படக்குழு, நடிகர், நடிகைகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சில ஓட்டுநர், நடத்துநர்கள் மதுபோதையில் பேருந்துகளை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. இது பயணிகளின் பாதுகாப்பு பிரச்னை என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆல்கஹால் அளவை மதிப்பிடும் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இக்கருவியை பயன்படுத்தி, தினமும் பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் சோதனை செய்யவும், மதுபோதையில் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வக்பு வாரிய திருத்த மசோதா சட்டமாகவுள்ள நிலையில், கத்தோலிக்க சர்ச்சுகளின் நிலத்தின் மீது RSS கவனத்தை திருப்பி இருக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ இணையமான ஆர்கனைசரில், அதிக நிலம் யாரிடம் உள்ளது? கத்தோலிக்க சர்ச்சிடமா இல்லை வக்பு வாரியத்திடமா?’ என்ற பெயரில் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதில், கத்தோலிக்க அமைப்புகளிடம் 7 கோடி ஹெக்டேர் அளவுக்கு நிலங்கள் இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுவின் 7வது அவதாரமான ராமரின் பிறப்பைக் குறிக்கும் இன்று இவற்றைப் பின்பற்றுங்கள்: வீட்டை பூஜைக்காக சுத்தமாக வைத்திருங்கள் ◆காலையில் புனித நீராடுங்கள் ◆வீட்டையும் பூஜை அறையையும் பூக்களை கொண்டு அலங்கரியுங்கள் ◆கருப்பு உடைகளை தவிருங்கள் ◆விரதத்தை மேற்கொண்டு ராம நாமத்தை உச்சரியுங்கள் ◆ராமாயணத்தை படியுங்கள் ◆தானம் செய்யுங்கள் ◆மது, அசைவ உணவு, தகாத வார்த்தைகள் கூடாது.
ராம நவமி நாளான இன்று நண்பகல் 12 மணியளவில் ராமேஸ்வரத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதுகுறித்து அவர், அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துகள். பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது நிலைத்திருக்கட்டும். நமது அனைத்து முயற்சிகளில் நம்மை வழிநடத்தும்; இன்று ராமேஸ்வரம் வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ₹87ஆக இருந்த நிலையில் இன்று ₹130க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தோல் நீக்கிய கறிக்கோழி விலை ஒரு கிலோ ₹200க்கும் விற்பனையாகிறது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சிக்கன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போயிங் ஆலையை விட 5 மடங்கு பெரியது. 20 எம்பையர் ஸ்டேட் கட்டடத்தை விழுங்கும் அளவுக்கு உலகின் மிகப் பெரிய கட்டடத்தை எழுப்பி வருகிறது சவுதி அரசு. சுற்றுலாவை ஈர்க்க ரியாத்தில் சுமார் ₹43 லட்சம் கோடி செலவில் 400 மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட்டு வருகிறது. ஆடம்பர ஓட்டல்கள், தியேட்டர்கள், ரூப் டாப் கார்டன்கள் என அத்தனையும் இதற்குள் இருக்குமாம். 2030க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வாட்ச் மேனாக பணியாற்றும் ராஜ்குமார் என்பவருக்கு ₹2.2கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். மாதம் ₹5,000 மட்டுமே ஊதியம் பெறும் அவர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது PAN எண்ணை வைத்து பல கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. எளிய மனிதர்களின் ஆதார், PAN-ஐ வைத்து நடக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன.
➥ IPL தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் 50 கேட்சுகளை பிடித்துள்ளார். 119 மேட்சுகளில் விளையாடி, இச்சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
➥ ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது 50வது IPL விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 44 மேட்சுகளில், 52 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ➥ RR அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக சஞ்சு சாம்சன் மாறியிருக்கிறார். 32 வெற்றிகளைப் பதிவுச் செய்து, ஷேன் வார்னே(31) சாதனையை சஞ்சு முந்தியுள்ளார்.
நடிகர்கள் ரவிக்குமார், ஸ்ரீதர் ஆகியோரின் அடுத்தடுத்த மரணம் கோலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் ‘அவர்கள்’ ரவிக்குமார்(71) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சோகம் மறைவதற்குள் நேற்று மாலை ‘சஹானா’ <<16006034>>ஸ்ரீதர்<<>> (62) மாரடைப்பால் காலமானார். கடந்த மாதம் 25ஆம் தேதி மனோஜ் பாரதிராஜா(48) மாரடைப்பால் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது. #RIP
Sorry, no posts matched your criteria.