news

News April 6, 2025

பாம்பன் பாலத்தின் வரலாறு!

image

இந்தியா, இலங்கையை இணைக்க 1876ல் உதித்த யோசனைதான் பாம்பன் பாலம் உருவாகக் காரணம். 1914ல் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட, மதுரை– தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 2014ல் நூற்றாண்டைக் கொண்டாடிய பாம்பன் பாலம் இயற்கை சீற்றங்கள், விபத்துகளால் பலவீனமடைந்ததால், அதன் அருகே தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பழசும் சரி, புதுசும் சரி, இரண்டுமே பொறியியல் அற்புதம் தான்!

News April 6, 2025

சிம்லாவுக்கு அடுத்தபடியாக உதகையில் ஹாஸ்பிடல்!

image

உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி ஹாஸ்பிடலை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். 45 ஏக்கரில், ₹353 கோடியில், 700 படுக்கை வசதி, பழங்குடியினருக்கு தனி வார்டு, 12 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் இந்த ஹாஸ்பிடல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசத்தில் அமைந்த மருத்துவ கல்லூரி என்ற பெருமையும் பெற்றுள்ளது. முன்னதாக ₹727 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கும் CM அடிக்கல் நாட்டினார்.

News April 6, 2025

ராமரைப் பெயர் குறித்த சில ஆச்சரியமான உண்மைகள்

image

இன்று ஸ்ரீராம நவமி கொண்டாடப்படும் நிலையில், ராமரின் பெயர் குறித்த தகவல்களை அறிவோம். ராகு வம்சத்தின் குருவான வசிஷ்டர் ‘ஸ்ரீ ராமர்’ என்ற பெயரை அவருக்கு சூட்டினார். ‘ராம’ என்ற சொல் 2 பீஜாட்சரங்களால் ஆனது. அவை ‘அக்னி பீஜ்’ மற்றும் ‘அமிர்த பீஜ்’. பீஜாட்சரம் என்பது ஒரு மந்திரத்தின் முதல் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒலியாகும். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 394 வது பெயர் ஸ்ரீ ராமர்.

News April 6, 2025

நிர்மலாவுடன் சீமான் சந்திப்பா?

image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரான நிர்மலா சீதாராமனை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து வருவது கூட்டணிக்கான அச்சாரமா? அல்லது அரசியல் ரீதியான காரணமா? என கேள்விகள் எழுந்திருக்கின்றன.

News April 6, 2025

வெள்ளி விலை 3 நாள்களில் 9% சரிவு.. மேலும் குறையுமா?

image

வெள்ளி விலை கடந்த 3 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹11,000 குறைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 9% குறைவாகும். இன்று விடுமுறை என்பதால் விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்பனையாகிறது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம், மெக்சிகோ, சீனா, ஆஸ்திரேலியா நாடுகளில் வெள்ளி உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் வரும் நாள்களில் மேலும் குறையும் என கூறப்படுகிறது.

News April 6, 2025

பான் கார்ட் வெச்சிருக்கீங்களா.. இத கண்டிப்பா செஞ்சிடுங்க!

image

டிச.31, 2025-க்குள், ஆதார் பதிவு ஐடியை வைத்து பான் கார்ட் பெற்றவர்கள், <<16008297>>ஆதார் எண்ணை பான் கார்டுடன்<<>> இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆதார் பதிவு ஐடி என்பது ஆதார் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்தபோது வழங்கப்பட்ட ஒரு தனித்துவமான எண் ஆகும். இணைக்க தவறுபவர்களுக்கு, வரி தாக்கலிலும், பான் தொடர்புடைய பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

News April 6, 2025

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

image

● Income Tax e-filing போர்ட்டலில் லாக்-இன் பண்ணுங்க ● முகப்புப் பக்கத்தில், ‘Link aadhaar’ஐ கிளிக் செய்யவும் ●பான், ஆதார் எண்ணை பதிவிட்டு, ‘Validate’ஐ கிளிக் பண்ணவும். ஏற்கனவே லிங்க் செய்யப்பட்டு விட்டால், அப்போதே மெசெஜ் வரும் ●ஆதார் கார்டில் இருப்பது போலவே சரியாக, பெயர் மற்றும் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பதிவிட்டு, லிங்க் ஆதார் என்பதை கிளிக் செய்யவும் ●OTPயை பதிவிட்டால் முடிந்து விடும்.

News April 6, 2025

இதுக்கு ஒரு ‘எண்டே’ இல்லையா?

image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு அளவே இல்லையா? என நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த டிரம்ப், மனிதர்களே வசிக்காத தீவையும் விட்டு வைக்கவில்லை. அண்டார்டிகா அருகே பென்குயின்கள் மட்டுமே வாழும் 2 தீவுகளுக்கும் 10% வரி விதித்துள்ளார். பென்குயின்களிடம் இருந்தும் வரி வாங்காமல் விடமாட்டார் என மீம்கள் வைரலாகின்றன.

News April 6, 2025

நிர்மலாவை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்!

image

மத்திய அமைச்சர் நிர்மலாவை, ADMK தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். டெல்லியில் அதிமுக MP தம்பிதுரையும், முன்னாள் MP கே.சி.பழனிசாமியும் அவரை சந்தித்து பேசியிருந்தனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், அவரை டெல்லியில் சந்தித்த நிலையில், மீண்டும் சென்னையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே பிளவு ஏற்பட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.

News April 6, 2025

13 ஆண்டுகளில் முதல் முறை.. தடுமாறும் CSK!

image

5 முறை சாம்பியனான CSKவின் கோட்டையை, மற்ற அணிகள் அசைத்து பார்க்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், தொடர்ச்சியாக 2 முறை ஒரு மேட்ச்சை CSK தோற்பது, 13 ஆண்டுகளுக்கு பிறகு, இதுவே முதல் முறை. 2012ல் ஏப்ரல் 28-ம் தேதி, PBKS அணிக்கு எதிராகவும், ஏப்ரல் 30-ம் தேதி, KKR அணிக்கு எதிராகவும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது CSK. இதில், சுவாரசியமான விஷயம், அந்த சீசனில் CSK ஃபைனல் வரை சென்று தோற்றது.

error: Content is protected !!