India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஜன.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

*ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படம் டிச. 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. *ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் ‘4th Floor’ படம் பிப்ரவரி மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. *வடிவுக்கரசி நடித்த “க்ராணி” படத்தின் டிரெய்லர் வெளியானது.

தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதிகளை கொடுக்காமல் ஓரவஞ்சகம் செய்த PM மோடி, நேற்று வெறும் பொய்களை மட்டும் அவிழ்த்துவிட்டு சென்றதாக வைகோ விமர்சித்துள்ளார். தேர்தல் அறிவித்த பிறகுதான், எத்தனை தொகுதியில் போட்டி, தனிச் சின்னத்தில் போட்டியா என்பதெல்லாம் என்பது குறித்து முடிவுசெய்யப்படும். அதுகுறித்து இப்போதே சொல்ல முடியாது எனக் கூறிய அவர், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார்.

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதற்கு அடுத்தாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படத்திலும், ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கிறார். இப்படி பிஸியாக உள்ள அவர் மாரி செல்வராஜுடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது அவரது 50-வது படம் எனவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. சூர்யா- மாரி காம்போ எப்படி இருக்கும்?

பிரபல ரவுடியை அழைத்து வந்த போலீசார் மீது <<18945501>>நாட்டு வெடிகுண்டு<<>> வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நயினார் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி. மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது போலீசார் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தை பேரழிவில் நிறுத்தியுள்ளது இந்த கேடுகெட்ட ஆட்சி என விமர்சித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

மாற்று கட்சிகளை கூட்டணியில் இணைப்பதில் முதலில் தொய்வில் இருந்த NDA கடந்த 2 வாரத்தில் வேகமாக செயல்பட்டது. அதன் விளைவாக பாமக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளை கூட்டணியில் இணைத்து தங்களின் பலத்தை NDA அதிகரித்தது. இந்நிலையில், வரும் ஜன.28, 29 தேதிகளில் அமித்ஷா தமிழகம் வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதிகோரிய வழக்கில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு சின்மயா பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் போன்று தூண் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதில் தீபம் ஏற்றினார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை சிக்கன் சாப்பிடலாம் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வந்துள்ளது. நாமக்கல்லில் கறிக்கோழி விலை (உயிருடன்) 1 கிலோ ₹133 ஆக குறைந்துள்ளது. மேலும், இந்த வாரத்தில் மட்டும் கிலோவுக்கு சுமார் ₹20 வரை சரிந்துள்ளது. இதனால், கடந்த வாரம் இறைச்சிக் கடைகளில் சிக்கன் கிலோ ₹300 வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது ₹40 வரை குறைய வாய்ப்புள்ளது. நாளை யாரெல்லாம் சிக்கன் வாங்க போறீங்க?

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். காலை எழுந்தவுடன் ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை. ஆனால், நம்மில் பலர் காலையில் பல் துலக்குவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம், இரவில் அலட்சியமாக இருந்துவிடுகிறோம். ஆனால், இரவில் பல் துலக்குவதும் மிகவும் அவசியம். அப்போதுதான், உணவுத் துணுக்குகள் பற்களில் ஒட்டிக்கொண்டு கிருமிகள் வளர உதவுவதை தடுக்க முடியும்.
Sorry, no posts matched your criteria.