India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், அந்த தகவலில் உண்மை இல்லை என அவர் உறுதிபடக் கூறியிருக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த மத்திய அமைச்சரை சீமானும், செங்கோட்டையனும் சந்தித்ததாக காலையில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் என்றால், அது நடிகை மமிதா பைஜூ தான். அழகிய க்ரீம் மற்றும் லைட் பச்சை கலர் ட்ரெஸில் மனதை திருடும் அழகிய போட்டோஸை அவர் இன்ஸ்டாவில் பதிவிட அது காட்டுத்தீ போல, ட்ரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், ‘அடப்போங்கடா… என் ஹார்ட் என்கிட்ட இல்ல’ என கமெண்ட் செய்து, லைக்ஸை பறக்கவிட்டு வருகின்றனர்.
பெங்களூருவில் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான பேட்மிண்டன் பயிற்சியாளரின் செல்போனில் 8 சிறுமிகளின் நிர்வாண போட்டோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுரேஷ் பாலாஜி, மைனர் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பயிற்சி மையத்திற்கு வரும் சில சிறுமிகளை குறிவைத்து ஆபாச போட்டோ, வீடியோ எடுத்துள்ளான். இவனை எல்லாம் என்ன செய்வது?
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு எதிராக சதி நடக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் வலிமையை குறைக்க பாஜக அரசு துடியாய் துடிக்கிறது. இதனை முதலிலேயே உணர்ந்து குரல் கொடுத்தது நாம்தான். இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் நமது எம்பிக்களின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்குகின்றனர் என்றும் விமர்சித்தார்.
கோயில்களில் வழங்கப்படும் அர்ச்சனை சீட்டு முதல் குடமுழுக்கு, திருப்பணிகள் என அனைத்திலும் ஊழல் நடப்பதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். அறநிலையத்துறையாக இல்லாமல் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழலில் திளைத்து அறமற்ற துறையாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார். கோயில்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை மூட, அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கூடலூரில் ரூ.26.6 கோடி மதிப்பீட்டில் 300 வீடுகள் கொண்ட கலைஞர் நகர் அமைக்கப்படும். ‘எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம்’ என்ற பயணத் திட்டத்தின் கீழ் 10 பேருந்துகள் இயக்கப்படும். நவீன வசதிகளுடன் கூடிய மல்டி லெவல் கார் பார்க்கிங் உருவாக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ₹550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய செங்குத்து பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்தடைந்தார். இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபத்திற்கு வந்தடைந்த அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி.நவாஸ் கனி, அண்ணாமலை, தமிழிசை, சரத்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகர் ஸ்ரீதர் (62) உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் பாலச்சந்தரின் ‘சஹானா’ சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் சஹானா ஸ்ரீதர் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். அழியாத கோலங்கள், விஐபி, ராஜவம்சம் திரைப்படங்கள் மற்றும் ஏராளமான சீரியல்கள் என வெள்ளித்திரை, சின்னத்திரையில் ஜொலித்தவர். #RIP
PM மோடி இன்னும் சற்று நேரத்தில் தமிழகம் வரவுள்ள நிலையில் X தளத்தில் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. தமிழக மக்களுக்கான வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் சுற்றுலா வந்து செல்வதாக திமுகவினர் பலரும் #GoBackModi-இன் கீழ் கருத்து பதிவிட்டு வருகின்றனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
*கோடை காலத்தில் முலாம்பழ ஜூஸ் குடிப்பதால் கண் எரிச்சல், கண் சூடு பிரச்னையை தவிர்க்கலாம். *இளநீர் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம், சோடியம், கால்சியம் சத்துகளை அளித்து உடலை காக்கிறது. *வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்து வர தொண்டையில் வறட்சி வராமல் தடுக்கலாம். *ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் நீர்ச்சத்து குறையாமல் வெயிலை தாங்கக் கூடிய சக்தியை தருகிறது. இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
Sorry, no posts matched your criteria.