news

News April 7, 2025

வெறும் 6 அடி பஸ்ஸில் 7 அடி கண்டக்டர்…!

image

அரசு வேலை கிடைச்சிடுச்சு.. இனி உனக்கு என்ன கஷ்டம் எனக் கேட்டால், இவருக்கு அந்த வேலையே கஷ்டமாக மாறிவிட்டது. பஸ்ஸில் டிக்கெட் கொடுக்க, இவர் எந்திரிச்சி நின்றால், பஸ்ஸின் மேற்கூரையில் தலை இடிக்கும். கழுத்தை சாய்த்தப்படியே டிக்கெட் கொடுக்கிறார். பஸ்ஸின் உயரம் 6 அடி, இவரோ 6.4. தெலங்கானாவில் சொல்ல முடியாமல் தவிக்கும் இவருக்கு வேறோரு சரியான வேலைக் கொடுக்கும்படி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

News April 7, 2025

5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

image

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.

News April 7, 2025

ஹாஸ்பிடலில் SRH பவுலர்!

image

SRH பவுலர் ஹர்ஷல் படேல், நோய் பாதிப்பின் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், அவருக்கு கரெக்ட்டாக என்ன பிரச்னை என்ற தகவல் ஏதும் இல்லை. இதனால்தான் அவர், GT அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. IPL ஏலத்தில் ₹8 கோடிக்கு ஹர்ஷல் படேலை SRH வாங்கியது. பவுலிங்கில் தடுமாறி வரும் SRHல், அவர் விளையாடி இருக்க வேண்டும் என SRH ஃபேன்ஸ் பறிதவித்து வருகின்றனர்.

News April 7, 2025

ராகுலுக்கு கேரள பாஜக கண்டனம்!

image

பாஜக, RSSன் பார்வை சர்ச் நிலங்கள் மீது திரும்பியிருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். முதலில் அரசமைப்பை நன்கு படியுங்கள் என கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே, தேயிலை தோட்ட உரிமையாளர்கள் போல சொந்தமாக நிலங்கள் வைத்திருப்பது தவறல்ல. கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் போல மக்களிடம் இருந்து பறிப்பதுதான் தவறு. அதைதான் வக்பு வாரியம் செய்தது என விமர்சித்துள்ளார்.

News April 7, 2025

CSK-வின் அடுத்த ஆட்டம்.. இன்று டிக்கெட் விற்பனை

image

CSK – KKR அணிகள் வரும் 11-ம் தேதி சேப்பாக்கத்தில் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 09:30 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது. கடந்த முறை டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. என்னதான் CSK தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் நிச்சயம் அதில் இருந்து மீண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீங்க டிக்கெட் வாங்க ரெடியா?

News April 7, 2025

TVH குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ED ரெய்டு

image

சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட 5 இடங்களில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. எந்த வழக்கின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

News April 7, 2025

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

image

தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறைக்கு பின் கூடும் இன்றைய கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது. பிரதமர் நிகழ்ச்சியில் CM ஸ்டாலின் பங்கேற்காதது குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 7, 2025

மீண்டும் அண்ணாமலை ‘தலைவர்’?

image

தமிழகத்தில் பாஜக காலூன்ற அண்ணாமலை தலைவர் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் டெல்லி தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனராம். தேசிய தலைமைக்கும் மாநில தலைமை மாற்றத்தில் விருப்பமில்லை என்றாலும், இபிஎஸ் அழுத்தத்தால் மாற்றம் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை தலைவராக தொடர்வது குறித்து அதிமுகவிடம் மீண்டும் BJP பேசி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

News April 7, 2025

துருக்கி டூ அமெரிக்கா.. பிக்காச்சு அலப்பறைகள்

image

பிக்காச்சு என்ற பெயரை கேட்டாலே 90s kids-க்கு அப்படி ஒரு ஆனந்தம் வரும். அதெல்லாம் எப்படி 2k kids-க்கு தெரியும். அதவிடுங்க, சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற போராட்டத்தில் பிக்காச்சு உருவத்தில் ஒருவர் பங்கேற்று கவனத்தை ஈர்த்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்று வரும் மிகப்பெரிய போராட்டத்திலும் பிக்காச்சு போல் வேடமிட்டு ஒருவர் பங்கேற்றுள்ளார்.

News April 7, 2025

மீண்டும் தலைவர் ஆகும் அண்ணாமலை?

image

அண்ணாமலையே மீண்டும் மாநிலத் தலைவர் ஆவார் என பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியுள்ளார். பாஜகவின் புதிய தலைவரை மேலிடம் தேடி வரும் நிலையில், EPS-ம் அவரை மாற்ற அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் அண்ணாமலைதான் தலைவர் ஆவார் என்று வி.பி.துரைசாமி பேசியிருக்கிறார். இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

error: Content is protected !!