news

News April 7, 2025

300 இருக்கட்டும்… அதுல பாதிக்கூட வரல..!

image

நடப்பு IPL சீசனின் முதல் போட்டியில் SRH விளையாடியதைப் பார்த்து, அடேங்கப்பா… இவுங்க தான் 300 ரன்கள் அடிக்கப்போற ஃபர்ஸ்ட் டீம் என்றெல்லாம் கம்பு சுத்தினார்கள் ரசிகர்கள். ஆனால், இப்போ நிலைமையே வேறு. ஆம், பட்டா பாக்கியம்… படாட்டி லேகியம் என்ற போக்கில் கடைசி 2 மேட்சில் SRH 150 ரன்களுக்கே தடுமாறி விட்டது. ஃபேன்ஸ் புலம்ப ஆரம்பித்து விட்டனர். SRH மீளுமா.. நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 7, 2025

ரெப்போ வட்டி குறைகிறது

image

வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% ( நாளை மறுநாள்) குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட்டி விகிதம் குறைந்தால், வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் வாங்கியவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால், ‘பிக்சட் டெபாசிட்’ போன்ற முதலீட்டிற்கு வட்டி குறையும் சிக்கலும் உள்ளது. மேலும், பணப்புழக்கம் அதிகரிக்கும், கடன் வாங்குதல் அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும்.

News April 7, 2025

BREAKING: அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் சோதனை

image

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் ED சோதனை நடைபெற்று வருகிறது. நேருவின் மகன் மற்றும் சகோதரர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வந்த அதிகாரிகள், தற்போது தில்லை நகரில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் உள்ள அமைச்சரின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2025

‘என்னால் ஜீரணிக்க முடியவில்லை..’

image

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பும்ரா இல்லாத போதும், சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து மறைமுகமாக பேசியுள்ள அவர், ‘ஒரு கட்டத்தில் நடந்த விஷயத்தை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை, ஆனாலும் என் விளையாட்டின் மீதே கவனம் வைத்ததாக தெரிவித்தார். நடப்பு IPL தொடரில் அவர், தொடர்ந்து 2 போட்டிகளில், GT அணிக்காக விளையாடி ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

News April 7, 2025

செங்கோட்டையன் மீது நடவடிக்கையா?

image

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் 2வது முறையாக சந்தித்தது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில், செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் சாடியிருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் செங்கோட்டையன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News April 7, 2025

கடவுளுக்கு ஸ்பெஷல் ‘Boarding pass’

image

விமானத்தில் செல்ல, நமக்கு ‘Boarding pass’ கொடுப்பார்கள். ஆனால், இங்கு கடவுளுக்கும் ஸ்பெஷல் ‘Boarding pass’ கொடுத்து ஏற்றிவிட்டு இருக்கின்றனர். சீனாவின் 2 கடல் தெய்வங்களின் விக்கிரகங்களை தைவான் நாட்டுக்குக் கொண்டு செல்ல, Xiamen ஏர்லைன்ஸ் ஆபிசர்கள், இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். விமானத்தில், தெய்வங்கள் அழகாக அமர்ந்து பயணித்த போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும், ரூல்ச மீற முடியுமா!

News April 7, 2025

சொத்து விவரங்களை வெளியிட்ட நீதிபதிகள்!

image

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்து அண்மையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டறியப்பட்டது. இதனால் நீதித் துறை மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்ட, சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர். அதன் அடிப்படையில் நாட்டில் உள்ள 25 ஐகோர்ட்களில் இருக்கும் 769 நீதிபதிகளில் 95 பேர் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

News April 7, 2025

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜே நார்த் காலமானார்

image

குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட்டில் அறிமுகமான நடிகர் ஜே நார்த்(73) பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். இவர், பிரபலமான ‘Dennis the menace’ தொடரிலும், 1999ல் வெளிவந்த தி சிம்ப்சன்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தன்னுடைய அசாத்திய திறமையால் கால் நூற்றாண்டு ஹாலிவுட்டை கலக்கிய அவருக்கு, திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP

News April 7, 2025

இன்று உலக சுகாதார நாள்..! ஹெல்த்தில் கவனம் வையுங்க!

image

மகிழ்ச்சியான வாழ்வுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தேவை. 1948ல் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிறுவப்பட்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், ‘Healthy beginnings, hopeful futures’. ஆகவே, தீயப்பழக்கத்தை இன்றே கைவிடுங்கள். நண்பர்களோடு சேர்ந்து செய்யும் போது ஸ்டைலாக, ஜாலியாக இருந்தாலும், பின் விளைவுகளை தனியாகவே சந்திக்கணும்.

News April 7, 2025

கே.என்.நேருவின் மகன், சகோதரர் வீட்டில் ED சோதனை

image

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை(ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அதிகாலை முதலே 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல், பெரம்பலூர் தொகுதி எம்.பியும், கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!