India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் (மார்ச் 19, 20) சென்னை தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு பெறலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். தொடர்ந்து, மார்ச் 21ல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடமும் நேர்காணல் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தது. இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளது என AIMIM கட்சித் தலைவர் ஓவைசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இத்துடன் சேர்த்து இந்த சட்டத்தின் மீது தொடரப்பட்ட 262 வழக்குகள் மீதும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 3D தொழில்நுட்பத்தில், பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் 2 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில், மாலை டீசர் வெளியாவதை குறிப்பிட்டு படத்தின் புதிய போஸ்டரை சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். டிரம்ப் நமது அடிப்படை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஜோ பைடனும் நானும் இணைந்து நமது உரிமைகளைப் பாதுகாப்போம். துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை எடுத்துரைப்போம். டிரம்புக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உள்ளது, என்று அவர் டிவீட் செய்துள்ளார்.

காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம். 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்க உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று முதல் நாளை (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சிக்கான டோக்கன் வழங்கியதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை விதியை மீறியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்கோடி தொகுதியான குமரி, எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், சாதிரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இதுவரை இங்கு நடந்த 4 தேர்தல்களில் திமுக 1, காங். (கூட்டணி) 2, பாஜக 1 என வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா தனது ஓய்வை திரும்பப் பெற்றுள்ளார். முன்னதாக அவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீபத்தில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரையை ஏற்று தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து வரும் 22ஆம் தேதி நடைபெறும் வங்க தேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

பெண் குழந்தையை பெற்றெடுத்தபின் நடிகை ஷ்ரேயா தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்திய நேர்காணலில் ரஜினி குறித்து பேசிய அவர், ‘சிவாஜி படத்தில் நடிக்கும்போது நீங்கள் தற்போது ஹிட் படங்களில் நடித்துள்ளீர்கள். நாளை இந்த நிலைமை மாறலாம். எப்பேதும் ரசிகர்களோடு மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். அவர்களிடம் அன்புடன் நடந்துகொள்ளுங்கள்’ என ரஜினி அட்வைஸ் செய்ததாக கூறியுள்ளார்.

கோடைகாலம் தொடங்கும் முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் மட்டுமின்றி ஸ்ட்ராபெர்ரி வெள்ளரி சம்மர் பூஸ்ட் ட்ரை பண்ணி பாருங்கள். ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி, 1 ஆரஞ்சு, 1 கப் வெள்ளரியுடன் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை கலந்து அரைத்து, ஜூஸ் தயார் செய்து பருகலாம். இந்த ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதுடன், உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவும்.
Sorry, no posts matched your criteria.