news

News April 7, 2025

நொந்து போய் உள்ள ADMK தொண்டர்கள்தான் தியாகிகள்

image

டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் CM ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி.. முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். மேலும், அதிமுகவினர் தாம் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்துள்ளனர் எனவும் சாட்டியுள்ளார்.

News April 7, 2025

எட்டாக்கனியாகும் சொந்த வீடு கனவு!

image

டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூருவாசிகளுக்கு சொந்த வீடு வாங்கும் கனவு எட்டாக்கனியாக மாறி வருகிறது. ஏனெனில் இந்நகரங்களில் சொந்த வீடு வாங்க ₹1.2– ₹1.5 கோடி வரை செலவு செய்ய வேண்டும். ஆனால், நடுத்தர குடும்பத்தினரின் ஆண்டு வருமானமோ ₹7–₹8 லட்சம் வரைதான் இருக்கிறது. இதனால், இப்போதைக்கு வாடகை வீட்டில் வாழ்வதுதான் சிறப்பு என ரெடிட் தளத்தில் பலர் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

News April 7, 2025

BREAKING: இபிஎஸ் சஸ்பெண்ட்

image

டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சட்டபேரவையில் இபிஎஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்த அக்கட்சியின் எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், யார் அந்த தியாகி என்ற பதாகைகளை காட்டிய அவர்களை உடனே வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News April 7, 2025

டாஸ்மாக் விவகாரம்.. அதிமுகவினர் அமளி

image

டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார். இதற்கு எதிர்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள், ‘யார் அந்த தியாகி?’ என்று முழக்கம் எழுப்பினர்.

News April 7, 2025

இந்தியாவின் GDP வளர்ச்சி பாதிக்குமா?

image

அமெரிக்கா விதித்த 26% சதவீத இறக்குமதி வரியால், இந்தியாவின் GDP வளர்ச்சி சற்று மந்தமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் RBI தனது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைக்க நேரிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்குப் பின் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.3% இருந்து 6.1% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 7, 2025

வீட்டில் ரெய்டு.. பேரவையில் நேரு

image

அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு நடத்தி வரும் நிலையில், அவர் சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ளார். வீட்டில் ரெய்டு நடப்பதற்கான எந்த அறிகுறியும் அவரது முகத்தில் தெரியவில்லை. வானதி சீனிவாசன், பாமக MLA உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு விடை நேரத்தில் பதிலளித்து வருகிறார். இது ஒருபுறம் என்றால் அவரது இல்லத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதாரவாளர்கள் குவிந்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

News April 7, 2025

பிரபல இயக்குநர் டி.கே.வாசுதேவன் காலமானார்!

image

மலையாள இயக்குநர் டி.கே.வாசுதேவன் (89) காலமானார். நடிகர், கலை இயக்குநர், இயக்குநர் என 1960களில் மலையாள திரையுலகின் முக்கிய அங்கமாக வாசுதேவன் திகழ்ந்தார். மிகவும் பிரபலமான ஃபேமஸான ‘செம்மீன்’ படத்தில் இவர் அசோசியேட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். என்டே கிராமம், விஸ்வரூபம் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். வாசுதேவன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News April 7, 2025

மீனவர்களுக்கு ₹576 கோடியில் சிறப்புத் திட்டங்கள்: CM

image

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மீனவர்கள் நலனுக்காக ₹576 கோடியில் சிறப்பு திட்டங்களை CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தங்கச்சிமடத்தில் ₹150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், 7,000 மீனவர்களுக்கு உபகரணங்களுடன் பயிற்சி வழங்க ₹52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், 14,700 பேருக்கு மீன்பிடி சாராத தொழில்களுக்கு பயிற்சி அளிக்க ₹53 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என CM உறுதியளித்தார்.

News April 7, 2025

புதிய சாதனைக்கு ரெடியாகும் விராட் கோலி

image

தகர்க்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி, மேலும் ஒரு சாதனைக்கு ரெடியாகியுள்ளார். டி20 போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க அவருக்கு 17 ரன்களே தேவை. ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் கெயில்(14,562), அலெக்ஸ் ஹேல்ஸ்(13,610), மாலிக்(13,557), பொல்லார்டுக்கு (13,537) அடுத்த இடத்தில் அவர் உள்ளார். கோலி இன்று சாதிப்பாரா?

News April 7, 2025

உலகளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி!

image

டிரம்பின் புதிய வரி விதிப்பு எதிரொலியாக உலக அளவில் பங்குச்சந்தைகள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன. ஆசிய சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. சீனா – 5.5%, ஜப்பான்- 4.2%, சிங்கப்பூர்- 7%, ஹாங்காங்- 8.7%, மலேசியா- 4.4% பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன. அதேபோல் ஆஸ்திரேலியாவில் 4.1%, பிலிப்பைன்ஸில் 4%, நியூசிலாந்தில் 3.6% சரிந்துள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வகையில் இன்று காலை நேர வர்த்தகப்படி <<16018543>>4%<<>> சரிந்துள்ளது.

error: Content is protected !!