news

News April 7, 2025

வக்ஃப் சட்டத்தை அமல்படுத்தும் கேரளா!

image

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்யும்போது கேரளா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து, சட்டமாகியுள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக அந்தச் சட்டத்தின் கீழ் வக்ஃப் வாரியத்தை ஏற்படுத்த கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதலில் எழுந்த கடும் எதிர்ப்பு, இப்போது எப்படி காணாமல் போனது? கமெண்ட் செய்யுங்கள்!

News April 7, 2025

டாஸ்மாக் முறைகேடு நிரூபணமாகி விட்டது: இபிஎஸ்

image

சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டியளித்த இபிஎஸ், டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்ததை சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை வேறு மாநில ஐகோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என டாஸ்மாக் கோரிக்கை வைத்தது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு தவறு செய்தது நிரூபணம் ஆகிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இபிஎஸ் கூறினார்.

News April 7, 2025

பரஸ்பர வரி விதிக்குமா? இந்தியாவின் முடிவு என்ன?

image

அமெரிக்காவுக்கு பதிலடி தரும் வகையில் சீனா பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை உயர்த்த தயாராகி வருகின்றன. ஆனால், இந்தியா இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த விரும்புகிறது. முதல் நாடாக அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து ஆசிய நாடுகளை ஓரங்கட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

News April 7, 2025

இபிஎஸ் குற்றச்சாட்டு… அமைச்சர் ரகுபதி மறுப்பு!

image

டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக இபிஎஸ் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி இவ்வாறு விளக்கமளித்துள்ளார். மேலும் டாஸ்மாக் விவகாரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்றும், அதை நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

News April 7, 2025

சீமானுக்கு கெடு விதித்த கோர்ட்!

image

நாதக தலைவர் சீமான் மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் கோர்ட் கெடு விதித்துள்ளது. தன்னையும், தனது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இன்று காலை வழக்கு விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்லை. இதனால் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.

News April 7, 2025

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை!

image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை 8.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை வரை வடமேற்கு திசையில் நகரும் எனவும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மத்திய கடலில் வடக்கு நோக்கி நகரும் என்றும் கணித்துள்ளது.

News April 7, 2025

AI வரமா? சாபமா? 2030ல் நடக்கப் போகும் விபரீதம்!

image

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு மனித சமூகத்துக்கு உதவியாக இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தையும் கொண்டு வருகின்றன. அப்படி ஒரு ஆபத்து AI வளர்ச்சியால் வரும் என்கிறார் அதனை ஆய்வு செய்து வரும் டீப்மைண்ட் நிறுவன சிஇஓ டெமிஸ் ஹாஸாபிஸ். வரும் 2030க்குள் மனிதர்களை போல AIக்கு அறிவுத்திறன் கிடைத்துவிடும் என இவர் கணித்துள்ளார். அதே நேரம், இது மனிதாபிமானத்தை முற்றிலும் அழித்துவிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

News April 7, 2025

வக்ஃப் வாரிய சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

image

வக்ஃப் வாரிய சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வக்ஃப் வாரிய சட்டத்துக்கு எதிராக தாக்கலாகும் மனுக்களை விரைந்து விசாரிக்க கோரி தலைமை நீதிபதியிடம் முறையிடவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

News April 7, 2025

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

image

அமெரிக்காவின் வரி விதிப்பு அமலான நாளில் இருந்தே உலகின் பல நாடுகளுக்கு டென்ஷன்தான். அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்திய பங்குச் சந்தை இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 19 காசுகள் சரிந்துள்ளது. தற்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு, ₹85.63 ஆக இருக்கிறது. ரூபாயின் மதிப்பு உயர என்ன செய்யலாம்?

News April 7, 2025

அதிமுக மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து மரணம்

image

தெற்கில் கடந்த வாரம் ‘கானா’ கருப்பசாமி, வடக்கில் நேற்று பெருமாள் என மூத்த தலைவர்களின் அடுத்தடுத்த மறைவு அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் தருணத்தில் இரு முக்கிய தளபதிகளை இழந்துவிட்டோம் என இபிஎஸ், நிர்வாகிகளிடம் வேதனையுடன் கூறியுள்ளார். <<15888600>>Ex MLA கருப்பசாமி<<>>, <<16015298>>Ex MP பெருமாள்<<>> இருவரும் நல்ல களப் பணியாளர்கள் என்பதால் ஜெயலலிதாவின் நற்பெயரை பெற்றவர்கள் ஆவர்.

error: Content is protected !!