news

News April 7, 2025

இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

image

டாய்லெட் Flush-ல் 2 விதமான பட்டன்கள் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என இதுவரை நீங்கள் யோசித்தது உண்டா? நீர் பயன்பாட்டை குறைக்கவே 2 பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. திரவக் கழிவுகளை அகற்ற, குறைவான நீரை வெளியேற்றும் சின்ன பட்டனும், திடக் கழிவுகளை அகற்ற அதிகளவு நீரை அனுமதிக்கும் பெரிய பட்டனும் பயன்படுத்தப்படுகின்றன. இதை நாம் சரியாக பயன்படுத்தினால், ஆண்டுக்கு 20,000 லிட்டர் நீரை சேமிக்க முடியும்.

News April 7, 2025

நாளை முதல் விலை உயர்கிறது

image

சமையல் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தற்போது ரூ.803-க்கு விற்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.853 ஆக விலை உயரும். மேலும், மானியம் பெறும் PMUY பயனாளிகளுக்கும், சிலிண்டர் விலை ரூ.500-ல் இருந்து ரூ.550 ஆக விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வை நீங்கள் வரவேற்கிறீர்களா?

News April 7, 2025

செல்போன் பயன்படுத்தும் இளம்பெண்களே உஷார்…!

image

மனித வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட செல்போன்களால் இளைஞர்களை விட இளம் பெண்களுக்கே ஆபத்து அதிகமாம். ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட் போன்களால் இளம்பெண்களின் மனநலம் பாதிக்கப்படவும், தற்கொலை எண்ணம் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை ஒப்பிடும்போது பெண்கள் சற்று கூடுதல் கவனத்துடன் செல்போனை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகின்றனர். உஷாரா இருக்க லேடீஸ்!

News April 7, 2025

டிரம்ப் முடிவால் இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்

image

டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. சீன இறக்குமதிகளுக்கு 54%, வியட்நாம் பொருள்களுக்கு 46% USA-வில் வரி விதிக்கப்படுவதால், அந்நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு (26% வரி) மாற்ற அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. USA- பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை எவ்வாறு அமையும் என்பதை பொறுத்து இந்த மாற்றம் நிகழும்.

News April 7, 2025

சந்திரனால் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் 4 ராசிகள்!

image

சந்திரன் சிம்ம ராசிக்குள் நாளை(ஏப்.8) நுழைவதால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறதாம். *மேஷம்) புதிய தொழில் தொடங்க வாய்ப்பு, வேலையில் பதவி உயர்வு கிடைக்கக் கூடும். *சிம்மம்) தனிப்பட்ட, தொழில்முறை உறவுகளை தெளிவாக வழிநடத்த முடியும். *தனுசு) கல்வி, பயணம், ஆன்மிக தொழிலில் ஈடுபட்டால் முன்னேற்றம் ஏற்படும். * மீனம்) புத்திசாலித்தனமான நிதி முடிவுகளை எடுக்க வாய்ப்பு என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

News April 7, 2025

BREAKING: விராட் கோலி அதிரடி அரை சதம்

image

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் விராட் கோலி அதிரடியாக அரை சதம் விளாசியுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்கிறது. சால்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், படிக்கல், கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. கோலி 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார்.

News April 7, 2025

விராட் கோலியின் புதிய சாதனை

image

MI அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 17 ரன்களை கடந்திருக்கும் விராட் கோலி, டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் 14,562 ரன்களுடன் கிறிஸ் கெயில் இருக்கிறார். அலெக்ஸ் ஹேல்ஸ், ஷோயப் மாலிக், கீரன் பொலார்டு ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்க, விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

News April 7, 2025

ரயில் தாமதமானால் டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படுமா?

image

ரயில் தாமதமானால் முன்பதிவு டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படுமா, தரப்படாதா என பயணிகளுக்கு சந்தேகம் இருக்கும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம். ரயில் 3 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாகி, அதில் பயணி பயணிக்காது போனாலோ, அவர் செலுத்திய முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும். ஆன்லைன் டிக்கெட் எனில், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். கவுன்ட்டர் டிக்கெட் எனில் நேரில் சென்று விண்ணப்பித்து கட்டணம் பெறலாம்.

News April 7, 2025

ஆயுஷ்மான் குரானா மனைவிக்கு மீண்டும் கேன்சர்!

image

பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா காஷ்யப்புக்கு மீண்டும் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தாஹிராவே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தனக்கு இது 2வது பாதிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாஹிரா முன்னர், 2018 ஆம் ஆண்டிலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

News April 7, 2025

கேஸ் விலை உயர்வை திரும்ப பெறுங்க.. ஸ்டாலின் எதிர்ப்பு

image

கேஸ் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசை CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் கேஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது எனவும், ஒன்றிய பாஜக அரசே, தேர்தல் வரும் வரை காத்திராமல், விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!