India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காவல் உதவி ஆணையர் ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதான அவர், நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏ.கே. சிங் மோசமாக நடந்து கொண்டதால், அவரை பணிநீக்கம் செய்யும்படி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். எந்த விதத்தில் மோசமாக நடந்தார் என கெஜ்ரிவால் குறிப்பிடவில்லை.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.6,235ஆகவும், சவரன் தங்கம் ரூ.49,880ஆகவும் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.35ம், சவரனுக்கு ரூ.280ம் குறைந்தது. இதையடுத்து 2வது நாளாக இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,185 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480 ஆகவும் விற்பனையாகிறது.

காமெடி நடிகர் சேஷு உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக லொள்ளு சபா நடிகை ஸ்வேதா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ரீ யூனியன் நிகழ்ச்சியில் தான் அவரை கடைசியாக சந்தித்தேன். அன்றைக்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சென்று பார்த்த போது, முன்பு இருந்ததைவிட இப்போது நன்கு தேறியுள்ளார். கேட்பதற்கெல்லாம் பதில் சொல்கிறார். சீக்கிரமே குணமாகி வருவார்” எனக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்களையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகம் செய்யவிருக்கிறார். சென்னை பல்லாவரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. அதில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளனர். இக்கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வியட்நாமில் 34 வயது நபரின் அடிவயிற்று பகுதியில் 30 செ.மீ. நீள விலாங்கு மீன் உயிருடன் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கபட்ட அவரின் அடிவயிற்றை எக்ஸ்ரே செய்ததில் மீன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் மீன் அகற்றப்பட்டது. மலக்குடல் வழியாக மீன், பெருங்குடல் சென்று சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடைபெறுகிறது. மீனவர்களை விடுவிக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், பிற மாநில மீனவர்கள் குமரி எல்லையில் மீன் பிடித்ததை கண்டித்து குமரி மாவட்ட மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் வருகிற திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதுகுறித்து ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டியில், “இரட்டை இலை சின்ன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தீர்ப்பு எங்களுக்கு சாதமாக இருக்கும். அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளேன்” என்றார்.

தமிழ்நாடு கண்ட அறிவியல் மாமேதைகளில் ஒருவரான ஜி.டி.நாயுடுவின் 131ஆவது பிறந்தநாள் இன்று. கோவை மாவட்டம் கலங்கல் கிராமத்தில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு, ஆர்வத்துடன் படித்து மேதை ஆனார். அவர் கண்டுபிடித்த சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றைதான் நாம் இன்றும் பயன்படுத்திக் வருகிறோம். விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு ஆகியவற்றையும் கண்டுபிடித்து வளரச் செய்தவர் ஜி.டி.நாயுடு.

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம்-நாகர்கோவில் 25ஆம் தேதியும், நாகர்கோவில்-தாம்பரம் 24 & 31ஆம் தேதிகளிலும், நாகர்கோவில்-சென்ட்ரல் 24ஆம் தேதியும், சென்ட்ரல்-நாகர்கோவில் 25ஆம் தேதியும், எழும்பூர்-நாகர்கோவில் 28ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதனால் குமரி-புனே எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 போட்டிகளில் 12,000 ரன்களை கடந்து, விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 6 ரன்கள் எடுத்த போது, டி20 போட்டிகளில் 12,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற புதிய மைல் கல்லை எட்டினார். மேலும், கெயில், சோயிப் மாலிக், பொல்லார்டு, ஹேல்ஸ், வார்னருக்கு பிறகு 12,000 ரன்களை கடந்த 6ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அவரை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.