news

News March 23, 2024

டி.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் ஆதரவு

image

அரசியலில் மத நம்பிக்கைகளை கலந்தது போல இசையிலும் அரசியலை கலக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதல்வர், அவரை காழ்ப்புடன் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

News March 23, 2024

புதினுக்கு ரூ.16.71 லட்சம் கோடி சொத்துக்கள்

image

ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சோவியத் யூனியனின் கேஜிபி உளவுத்துறை அதிகாரியான அவர், 5 முறை அதிபராகியுள்ளார். அவருக்கு ரூ.16,71,877 கோடி சொத்துக்கள் இருப்பதாகவும், அதில் 19 பங்களாக்கள், 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சொகுசு கப்பலும் அடங்குமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

News March 23, 2024

ஓபிஎஸ் நிலைப்பாட்டால் குழப்பத்தில் ஆதரவாளர்கள்

image

பாஜக ஆதரவுடன் ஒரேயொரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நிலைப்பாட்டை ஓபிஎஸ் எடுத்ததைக் கண்டு அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், பாஜகவிடம் 10 தொகுதிகளை பெறுவார், அதில் போட்டியிடலாம் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்புக் கொண்டதைக் கண்டு, இது என்ன நிலைப்பாடு என தெரியாமல் அவர்கள் குழம்பியுள்ளனர்.

News March 23, 2024

மற்றொரு வேட்பாளர் விலகல்

image

பாஜகவைச் சேர்ந்த வதோதரா எம்.பி. ரஞ்சன் பட், வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார். நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் பாஜக ஏற்கெனவே இவரது பெயரை அறிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பின்வாங்குவது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல குஜராத் வேட்பாளர் பிகாஜி தாகூரும் போட்டியிடப் போவதில்லை என்று சற்றுமுன் அறிவித்தார்.

News March 23, 2024

அழகியை மணந்தார் சொமாட்டோ தலைவர்

image

சொமாட்டோ (Zomato) நிறுவனத்தின் உரிமையாளர் தீபிந்தர் கோயல், மெக்சிகோவைச் சேர்ந்த மாடலான கிரேஸியா முனோஸை திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த திருமணம் குறித்து, அவர்கள் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை. 41 வயதாகும் தீபிந்தர் கோயலுக்கு இது 2ஆவது திருமணம் ஆகும். முன்னதாக டெல்லி ஐஐடி-இல் படிக்கும் போது காஞ்சன் ஜோஷி என்பவரை திருமணம் செய்து இருந்தார்.

News March 23, 2024

திமுக கூட்டணியில் சேர்ந்தது ஏன்?

image

மதவாதத்தை பாஜக பரப்புவதால், திமுக கூட்டணியில் சேர்ந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஆரம்பத்தில் அரசியலை நான் வெறுத்தேன். ஆனால் நல்ல முயற்சிகளை அரசியல் மூலமே செய்ய முடியும் என்பதை உணர்ந்து அரசியலுக்கு வந்தேன். திமுக கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்சி (பாஜக) மக்களை மதத்தின் மூலம் பிளவுபடுத்துவதால், திமுக அணியில் இணைந்தேன்” என்றார்.

News March 23, 2024

நடிகர் பிரபாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

image

கல்கி 2898ஏடி படப்பிடிப்பில் அசைவம் சாப்பிட்டு கொண்டு, கடவுள் கிருஷ்ணராக பிரபாஸ் நடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்கி 2898ஏடி திரைப்படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் பிரபாஸ் நடிப்பதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பின் போது அவர் அசைவம் சாப்பிடுவதாகவும், பிறகு கிருஷ்ணர் வேடத்தில் நடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சமூக வலைதளத்தில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

News March 23, 2024

BREAKING: பாஜக வேட்பாளர் விலகல்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என குஜராத்தின் சபர்கந்தா தொகுதி பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்களான பின்பு தற்போது அவர் இவ்வாறு அறிவித்திருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து எந்த அறிவிப்பையும் பிகாஜி வெளியிடவில்லை.

News March 23, 2024

நல்ல நோக்கத்துடன் தேர்தல் பத்திர திட்டம் அமல்

image

நல்ல நோக்கத்துடனே தேர்தல் பத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “அரசியல் கட்சிகள் செயல்பட நிதி தேவைப்படுகிறது. அந்த நிதி அரசியல் கட்சிகளுக்கு நேரடியாக வெளிப்படைத் தன்மையுடன் கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனேயே தேர்தல் பத்திரத் திட்டம் அமல்படுத்தப்பட்டது” எனக் கூறினார்.

News March 23, 2024

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம்

image

பாதுகாப்பு விதிகளை மீறியதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டிஜிசிஏ அதிகாரிகள், ஏர் இந்தியா நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு ஏர் இந்தியா அளித்த பதில் திருப்தி அளிக்காததால், அந்நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!