news

News April 9, 2025

சிலிண்டருக்கு கூடுதலாக ₹50 வசூல்

image

சிலிண்டர் விலை உயர்வு குறித்து குடும்ப தலைவிகள் தங்களின் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். சிலிண்டர் விலை ₹868.50 என்றால், வீட்டிற்கு சிலிண்டர் கொண்டு வந்து போடும் நபர் கூடுதலாக ₹50 வரை வசூலிக்கிறார். இதனால், ₹900க்கு மேல் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சிலிண்டருக்கு அரசு மானியம் தருவதில்லை. வெறுமனே ₹39.81 மட்டுமே வரவாகிறது. அதுவும் ஒரு சிலருக்கே இந்த மானியம் கிடைக்கிறது என புலம்புகின்றனர்.

News April 9, 2025

மார்னிங் செய்ய வேண்டிய இந்த ‘3’ சீக்ரெட்ஸ் தெரியுமா

image

*எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடிப்பது, உடல் உபாதைகளை வெளியேற்ற உதவும் *காலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி, தியானம் அன்றைய தினம் உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைக்க உதவும் *எந்த காரணத்தினாலும் காலை உணவைத் தவற விடக்கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து ஆயுளை அதிகரிக்கும். ட்ரை பண்ணுங்க…SHARE IT.

News April 9, 2025

CSKவை துரத்தும் துரதிருஷ்டம்!

image

கடும் தடுமாற்றத்தை 5 முறை சாம்பியனான CSK சந்தித்து வருகிறது. தொடர்ச்சியாக 4 தோல்வி அடைய ரசிகர்களும் துவண்டு போய் விட்டனர். 180+ ரன்களை சேஸ் செய்த போது, கடைசி 11 மேட்சுகளில் ஒன்றில் கூட CSK வெல்லவில்லை என்பது தான், இதில் மிக சோகமான விஷயம். CSKவின் இந்த பேட்டிங் சொதப்பலுக்கு என்ன காரணம் என நீங்க நினைக்கிறீங்க?

News April 9, 2025

இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

image

காப்பீடு உரிமை கோரும் விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. சோஹம் ஷிப்பிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளை செயல்படுத்தவில்லை என்பதற்காக இழப்பீடு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தது. பின்பற்ற முடியாத நிபந்தனைகளை விதிக்கக்கூடாது. நுகர்வோரிடம் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News April 9, 2025

2 நாள் அரசு பொதுவிடுமுறை

image

தமிழகத்தில் நாளை முதல் (வெள்ளிக்கிழமையை தவிர) தொடர் விடுமுறை வருகிறது. நாளை மகாவீரர் ஜெயந்தி மற்றும் தமிழ் வருட பிறப்பு ஏப்.14-ம் தேதி திங்கட்கிழமை பொதுவிடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சனி, ஞாயிறு வார விடுமுறை. இதனால், ஏப்.10, 12, 13, 14 என 4 நாட்கள் விடுமுறையாகும். இதனையொட்டி, தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, வெளியூர் பயணம் மேற்கொள்ள இப்போதே திட்டமிடுங்கள்.

News April 9, 2025

அட்சய திருதியை நாளில் 5 பொருள்களை வாங்குங்கள்

image

அட்சய திருதியை வரும் ஏப்.29-ம் தேதி மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரும். அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கம் என்றாலும், முடியாதவர்கள் மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள் கடுகு, புத்தகங்கள், உப்பு ஆகிய பொருள்களையும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது.

News April 9, 2025

திருமலையில் நாளை முதல் வசந்தோற்சவம்

image

திருமலை திருப்பதியில் நாளை முதல் வசந்தோற்சவம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திரயோதசி, சதுர்தசி, பெளர்ணமி ஆகிய 3 நாள்களிலும் திருமலையில் வசந்தோற்சவம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் காலை, மாலை என இரு வேளைகளில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். பெளர்ணமி நாளான 12 ஆம் தேதி கருட சேவை நடைபெறுகிறது. கோவிந்தா! கோவிந்தா!

News April 9, 2025

மீண்டும் குத்தாட்டம் போடும் தமன்னா!

image

ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட குத்தாட்டம் ரசிகர்களின் மனதில் அம்பாய் பாய்ந்தது. தொடர்ந்து ஸ்த்ரீ -2 படத்தில் தமன்னா போட்ட வளைவு, நெளிவான ஆட்டத்தை யூடியூப்பில் மட்டும் பல கோடி பேர் பார்த்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது அஜய் தேவ்கனின் ரெய்டு 2 படத்தில் குத்துப்பாடலுக்கு தமன்னா நடமாட உள்ளாராம். இதற்கு சம்பளமாக ₹5 கோடி பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 9, 2025

புதிய கவர்னர் விகே சிங்?

image

கவர்னர் ரவி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 முதல் கவர்னராக பணியாற்றி வரும் அவரின் பதவி காலம் ஏற்கெனவே முடிந்த நிலையில், புதிய கவர்னராக யாரை நியமிக்கலாம் என்று உள்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்துக்கு நன்கு பரீட்சயமான EX மத்திய அமைச்சரான விகே சிங் கவர்னராக நியமிக்கப்படலாம் என்றும் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் எனவும் கூறப்படுகிறது.

News April 9, 2025

சென்னை ஏர்போர்ட்டில் ₹6.31கோடி போதைப்பொருள்

image

சென்னை விமான நிலையத்தில் ₹6.31 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை சோதித்த போது அப்பெண் சிக்கியுள்ளார். அவரது வயிற்றில் இருந்து 90 மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!