India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து 6 சதவீதமாக அறிவித்திருக்கிறது RBI. இதனால், வங்கிகளில் கடன் வாங்கும் மக்களின் வட்டியும் குறைவாக விதிக்கப்படும். மேலும், வீட்டுக்கடன் வைத்திருக்கும் மக்களின் வட்டியும் குறையும் வாய்ப்புள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் வந்திருப்பதால் ரெபோ வட்டியை படிப்படியாக ரிசர்வ் வங்கி குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மறைந்த குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். குமரி அனந்தனின் பெருவாழ்வை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு பிரியாவிடை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். MP, MLA ஆக தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் எனவும் CM ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து ₹60 ஆயிரத்தை கடந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ₹66,320க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ₹8,290க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹102க்கும் விற்பனையாகிறது.
மதுரையில் தனியாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னை விட 10 வயது மூத்த பெண்ணான மயிலம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது தகாத உறவு இரு வீட்டாருக்குமே தெரிய வர இரு தரப்புமே அவர்களை கண்டித்துள்ளனர். இருப்பினும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை பிரிக்க உறவினர்கள் முடிவு செய்ததால், இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
தோனி மீது கடும் விமர்சனம் வைக்கப்படும் நிலையில், அவருக்கு ஆதரவாக தமன் ஒரு பதிவை வெளியிட்டார். அவரின் பதிவில், ‘குரைக்கும் நாய்கள் அனைத்தும் அவரின் ஆட்டத்தை பார்க்கும் என்று நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டார். அப்பதிவு விமர்சனத்தை பெற, ‘தன் நாட்டுக்காக பல தொடர்களை வென்றவர், நீங்கள் சொல்லும் அனைத்து ட்ராபிகளும் அவரால் தான்!’ என மீண்டும் பதிவிட்டார். தோனியின் ஆட்டம் குறித்து என்ன நினைக்கிறீங்க?
இலக்கியச் செல்வர் இறந்துவிட்டாரா? தகைசால் தமிழர் தவறிவிட்டாரா? இதயம் பதறுகிறது என்று வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளுக்குள் ஓர் இலக்கியவாதி, இலக்கியவாதிகளுக்குள் ஓர் அரசியல்வாதி. போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும் தமிழுக்காக மத்திய அரசிடம் ஓயாமல் போராடிய உரிமைவீரர் குமரி அனந்தன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக நாடுகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்காவில் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கு 104% வரை வரி விதித்திருப்பதால், அந்நாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி அதிகரிப்பு, பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால், அமெரிக்க மக்கள் உணவுப் பொருட்களை கூடுதலாக வாங்கி ஸ்டாக் வைக்கத் தொடங்கியுள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக் கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் CM ஸ்டாலின் கலந்து ஆலோசிக்கவுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பங்கேற்காது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கை EX அமைச்சருமான பிள்ளையான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மற்றும் ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில் மும்பை போலீஸார் 1,000 பக்க குற்றப்பத்திரிகையை பாந்தரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கைதான ஷரிஃபுல் இஸ்லாமுக்கு எதிராக தடயவியல் அறிக்கை, கத்தி உள்ளிட்ட ஆதாரங்களையும் இணைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் கொள்ளையடிப்பதற்காக சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்த இஸ்லாம், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றபோது கைதானார்.
Sorry, no posts matched your criteria.