India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஆகஸ்ட் 17 – ஆவணி 1 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சுன்யதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.
நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
இன்று (ஆகஸ்ட் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், அணியில் இடம்பெறுவோமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், சஞ்சு சாம்சன் ஒரு செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, KCA செயலாளர் லெவன் அணிக்கு வெற்றிக்கு உதவியுள்ளார். 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி, தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் எனும் செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.
இன்றைய சினிமாவில் சட்டவிரோத செயல்களை செய்யும் கேரக்டர்கள் தான் ஹீரோவாக உள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். கெட்டது செய்யும் ஹீரோக்கள் வெல்ல வேண்டும் என இன்றைய ரசிகர்கள் விரும்புவதாகவும், இந்த மனநிலை பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் ஹீரோவை கொண்டாடிய ‘புஷ்பா’ படத்தைதான் அவர் சாடியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – ஓய்வு ➤ மிதுனம் – சாந்தம் ➤ கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – நலம் ➤ கன்னி – இன்பம் ➤ துலாம் – அசதி ➤ விருச்சிகம் – பக்தி ➤ தனுசு – லாபம் ➤ மகரம் – ஆக்கம் ➤ கும்பம் – தனம் ➤ மீனம் – உற்சாகம்.
அஜித், விஜய்க்கு நிகரான நடிகர் சூர்யா, சமீபகாலங்களில் பெரிய வெற்றியைக் கொடுக்க தடுமாறி வருகிறார். ரெட்ரோவுக்குப் பிறகு அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. தமிழின் RJ பாலாஜி, தெலுங்கின் வெங்கி அட்லூரியை(லக்கி பாஸ்கர்) தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தின் ‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவனுடன் கூட்டணி சேர்கிறார் சூர்யா. பொங்கலுக்கு பிறகு படப்பிடிப்பு துவங்குகிறதாம்.
அலாஸ்காவில் நடந்த டிரம்ப் – புடின் சந்திப்பு பற்றி பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. டிரம்ப்பை சந்தித்தது புடின் அல்ல, அவரின் போலி (body double) என்பது அதிலொன்றாகும். டிரம்ப்பை சந்தித்த ‘புடின்’க்கு முகவாய்க்கட்டை சிறிதாக இருந்தது, ஒரிஜினல் கம்பீரம் இல்லை என்றும், ஊடக சந்திப்பில் டிரம்ப்பின் நடவடிக்கை வித்தியாசமாக நடந்து கொண்டதையும் குறிப்பிட்டு, அங்கு வந்தது ஒரிஜினல் புடின் இல்லையென்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.