news

News April 10, 2025

மீண்டும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி..

image

‘பரியேறும் பெருமாள்’ தொடங்கி ‘வாழை’ வரை தனக்கென தனி இடம் பிடித்த மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்போ ஹாட் டாப்பிக் பைசன் அல்ல மாரியின் அடுத்த படம். சரித்திர படமான இதில் தனுஷ் நடிக்கிறாராம். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, போஸ்டருடன் வந்துள்ளது. D56க்கு ரெடியா?

News April 10, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 10, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 10, 2025

அல்லு அர்ஜுன், அட்லிக்கு இவ்வளவு சம்பளமா?

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தின் பட்ஜெட் ₹800 கோடி என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுனுக்கு ₹175 கோடி, அட்லிக்கு ₹100 கோடியும் சம்பளம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு தகவலின் படி, படத்தில் லாபத்தில் அர்ஜுனுக்கு 30%, அட்லிக்கு 15% என பேசி இருக்கிறார்களாம். இதன்படி பார்த்தால், அல்லு அர்ஜுன் ₹250 கோடியும், அட்லி ₹125 கோடியும் பெறுவார்கள்.

News April 10, 2025

30 வயது பெண்களின் கவனத்துக்கு..!

image

*Thyroid Test: எடை அதிகரிக்க, முடி உதிர்தல் போன்றவற்றைக் இச்சோதனையை செய்து கண்டறியலாம். பிரச்னைக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கலாம் *Mammography: மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறியும் இந்த டெஸ்டை செய்வதை மிக அவசியம் *Complete blood count (CBC): ரத்த சோகையை இந்த டெஸ்டை செய்து பாருங்கள் *Pap Smear test: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய இந்த டெஸ்டை செய்யுங்கள்.

News April 10, 2025

குஜராத்துக்கு தொடரும் வெற்றி!

image

அகமதாபாத்தில் நடைபெற்ற RR-க்கு எதிரான ஆட்டத்தில் 217 ரன்களை GT குவித்தது. சாய் சுதர்சன்(82) அதிரடி ஆட்டத்தால் இமாலய இலக்கை நிர்ணயித்தது குஜராத். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. சஞ்சு சாம்சன்(41), சிம்ரான் ஹெட்மெயர்(52) சற்று ஆறுதல் அளித்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த RR 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் GT 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News April 10, 2025

காலையில் இதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்!

image

வாஸ்து சாஸ்திரப்படி, தினமும் காலையில் 5 விஷயங்களை செய்தால் வீட்டில் பண மழை கொட்டுமாம். 1) சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையை தொடங்க வேண்டும். 2) ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கடவுளை தியானிக்க வேண்டும். 3) படுக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும். 4) வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்ய வேண்டும். 5) ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இதை செய்தால் செழிப்பான வாழ்க்கை அமையுமாம்.

News April 10, 2025

தமிழகத்தை கைப்பற்றுவோம்: அடித்து கூறும் அமித்ஷா

image

2026 தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெல்லும் என அமித்ஷா அடித்துக் கூறியுள்ளார். ஆளுங்கட்சியின் ஊழலை மறைக்கவும், வாக்கு வங்கிக்காகவும் தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்து திமுக பேசி வருவதாகவும், இந்த விவகாரத்தை தென் மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திமுகவில் ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

ராசி பலன்கள் (10.04.2025)

image

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – லாபம் ➤மிதுனம் – குழப்பம் ➤கடகம் – ஆக்கம் ➤சிம்மம் – அசதி ➤கன்னி – நன்மை ➤துலாம் – சாந்தம் ➤விருச்சிகம் – ஜெயம் ➤தனுசு – உயர்வு ➤மகரம் – வெற்றி ➤கும்பம் – வரவு ➤மீனம் – புகழ்.

News April 10, 2025

ஜனநாயகத்தை அழிக்க விரும்பும் பாஜக: ராகுல் காந்தி

image

நாட்டில் ஜனநாயகத்தை பாஜக அழிக்க விரும்புவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அகமதாபாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகின்றன என்றும் சாடினார். நாட்டு மக்களின் வரிப் பணத்தை எடுத்து தொழிலதிபர்கள் அம்பானி, அதானியிடம் கொடுக்க நினைப்பதாகவும் விமர்சித்தார்.

error: Content is protected !!