news

News April 10, 2025

அம்பயருடன் சண்டை.. பாராக்கின் தரமான சம்பவம்

image

GT-க்கு எதிரான ஆட்டத்தில் RR வீரர் ரியான் பராக்கிற்கு அம்பயர்கள் கொடுத்த அவுட் சர்ச்சையானது. 7-ஆவது ஓவரில் பராக் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்க அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என பராக் ரிவியூவ் கேட்டார். 3-ஆவது நடுவர் பார்த்தபோது பந்து பேட்டை உரசுவதுபோல் ஸ்னிக்கோ மீட்டரில் காட்டியதால் அவரும் அவுட் கொடுத்தார். கடுப்பான பராக் அம்பயருடன் சண்டைக்கு சென்றுவிட்டார்.

News April 10, 2025

அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்

image

*மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய காரியங்கள் இந்த உலகை மாற்றும். *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள். *சிலர் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாக வருகிறார்கள்; சிலர் உங்கள் வாழ்க்கையில் பாடங்களாக வருகிறார்கள். *நேற்று என்பது கடந்துவிட்டது; நாளை என்பது இன்னும் வரவில்லை; எங்களுக்கு இன்று மட்டுமே உள்ளது. *அமைதி ஒரு புன்னகையில் தொடங்குகிறது.

News April 10, 2025

குணால் கம்ராவுக்கு வந்த பிக்பாஸ் ஆஃபர்

image

சமீபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த பேசியதால் பெரும் சிக்கலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சிக்கினார். வழக்குகளை சந்தித்து வரும் அவருக்கு சூப்பர் ஆஃபர் ஒன்று வந்துள்ளது. சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்க தயாரா? என அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் செல்வதற்கு பதில் நான் மெண்டல் ஹாஸ்பிடலுக்கு செல்வது நல்லது என்பது போல் குணால் தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

இன்ஸ்டா காதல்: கடல் கடந்து வந்த தேவதை

image

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு. மொழி, மதம், நாடு கடந்தும் காதல் மலரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது ஆந்திராவை சேர்ந்த சந்தனின் கதை. இன்ஸ்டகிராம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஜாக்லின் ஃபோரோவுடன் சந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. திருமணம் செய்வது என இருவரும் முடிவெடுக்க, சந்தனை தேடி ஆந்திராவில் உள்ள அவரது கிராமத்துக்கு ஜாக்லின் தற்போது வந்துள்ளார். செம லவ்ல?

News April 10, 2025

வர்த்தக போர்: சீனாவுக்கு 125% வரி விதித்த அமெரிக்கா

image

அமெரிக்க பொருட்களுக்கு 34% இறக்குமதி வரி விதித்த சீனாவுக்கு பதிலடியாக, அதன் பொருட்கள் மீதான வரியை 104% அதிகரித்து டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா வரியை 84% அதிகரித்தது. உடனே வரியை 125% உயர்த்துவதாக புதிய அறிவிப்பு ஒன்றை டிரம்ப் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதே நேரம் 70 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வை 90 நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News April 10, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 302
▶குறள்: செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. ▶பொருள்: வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

News April 10, 2025

இனி ஆப்பிள் ஒன்றும் NO.1 இல்லை!

image

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அந்தஸ்தை ஆப்பிள் இழந்துள்ளது. கடந்த 4 நாள்களாக அந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்ததால், அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் குறைந்துள்ளது. ஆப்பிளின் மூலதனம் $2.59 ட்ரில்லியனாக இருக்க, அதை ஓவர்டேக் செய்த மைக்ரோசாஃப்ட் $2.64 ட்ரில்லியனாக உருவெடுத்துள்ளது. டிரம்பின் வரிவிதிப்பால், சீன உற்பத்தியை நாடி இருக்கும் ஆப்பிளின் பங்குகள் குறைந்துள்ளன.

News April 10, 2025

IPL-ஐ ஓரங்கட்ட பாக். வீரர் கொடுத்த ஐடியா

image

வரும் 11ஆம் தேதி தொடங்க உள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) சிறப்பாக செயல்பட்டால், IPL பார்க்கும் ஆடியன்ஸ் PSL-ஐ பார்க்க வருவார்கள் என பாக். வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஐடியா கொடுத்துள்ளார். தேசிய அணி சர்வதேச போட்டிகளில் சொதப்புவது, உள்ளூர் கிரிக்கெட்டை பாதிப்பதாகவும் அவர் கவலைகளை எழுப்பியுள்ளார். ஒளிபரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், உலகின் 2ஆவது மதிப்புமிக்க தொடராக ஐபிஎல் உள்ளது.

News April 10, 2025

நடுவானில் போதையில் விமான பயணி மீது சிறுநீர் கழிப்பு

image

டெல்லியில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நபர், சக பயணி மீது சிறுநீர் கழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பேங்காக் சென்ற அந்த விமானத்தில் இருந்த நபர், அருகில் இருந்த மற்றொரு பயணி மீது சிறுநீர் கழித்தார். போதையில் அவர் இதை செய்தது தெரிய வந்தது. மேலும் பாதிக்கப்பட்ட நபர், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 10, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – 10 ▶பங்குனி – 27 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: த்ரயோதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶நட்சத்திரம்: பூரம் 20.01

error: Content is protected !!