India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று மாலை முதல் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ்கள் அனுப்ப முடியவில்லை என சோஷியல் மீடியாவில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஸ்டேட்டஸ் / ஸ்டோரி அப்டேட் பண்ண முடியவில்லை, வாட்ஸ்ஆப் உள்ளே போகவே முடியவில்லை, வாட்ஸ்ஆப் குரூப் வேலை செய்யவில்லை என்றெல்லாம் புகார் எழுந்துள்ளது. வாட்ஸ்ஆப் தரப்பில் விளக்கம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. உங்களுக்கு வாட்ஸ்ஆப் வேலை செய்கிறதா? கமென்ட்டில் சொல்லுங்கள்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1.10 கோடி பெண்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.1,000 அளித்து வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான ரூ.1,000 வருகிற 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பெண்களின் வங்கிக் கணக்கில் அரசால் நேரடியாக டெபாசிட் செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசு செய்யும் 20ஆவது டெபாசிட் ஆகும். என்ன ரூ.1,000 வாங்க நீங்க ரெடியா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
பலம் வாய்ந்த PBKS அணியும், SRH அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட உள்ளன. புள்ளிப் பட்டியலில் 5-வது உள்ள PBKS 3 போட்டிகளில் வென்றுள்ளது. கடைசியில் உள்ள SRH ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக, 4 போட்டிகளில் தோல்வி அடைந்த SRH இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. PBKS அணியும் பேட்டிங், பௌலிங்கில் கலக்கி வருகிறது. இந்த போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
தட்கல் ரயில் டிக்கெட் போல ப்ரிமீயம் தட்கல் டிக்கெட்டும் உள்ளது. இந்த டிக்கெட்டுக்கு, ரயில் டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 10% முதல் அதிகபட்சம் 30% வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். அதாவது அதிகபட்சம் ரூ.400 வரை கட்டணம் பெறப்படும். தட்கல் டிக்கெட்டுக்கான அனைத்து விதிமுறைகளும் இந்த டிக்கெட்டுக்கும் பொருந்தும். கன்பர்ம் ஆன ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரீபண்ட் தரப்படாது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணா நாடு கடத்தப்பட்ட நிலையில், இந்திய நகரங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. 2008ல் நிகழ்ந்தது போல, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உஷார்படுத்தியுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்கள், ரயில்வே நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அலர்ட் செய்துள்ளது.
வாரத்தின் சில நாள்களில் மட்டும் உண்ணாமல் இருப்பது (அ) மிகக் குறைவான உணவை உட்கொள்ளும் முறை இடையீட்டு உண்ணாவிரதம் (Intermittent Fasting) எனப்படுகிறது. இது உடல் செயல்பாட்டை சிறப்பாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உண்ணாவிரதத்தால் கல்லீரலின் வளர்சிதை மாற்ற செயல்பாடு சீரடைவதால், கழிவுநீக்கமும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாடும் சிறப்பாக நடைபெறும். டாக்டரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்து பாருங்களேன்.
சிவப்பு நிற ஜெர்சியில் விளையாடிவரும் ஆர்சிபி அணி, ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். மரம் நடுதல், புவி வெப்பமயமாதலை குறைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். அந்த வகையில் நாளை (ஏப். 13) ராஜஸ்தான் உடனான போட்டியில் பச்சை நிற ஜெர்சியில் பெங்களூரு விளையாட உள்ளது. நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அந்த அணி மூன்றில் வென்றுள்ளது.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அவர் விடைபெற்றதை அடுத்து, புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹெச். ராஜா, கரு நாகராஜன், சரத் குமார், வானதி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கியுள்ளதாக கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.
TN பாஜக தலைவராக எல்.முருகனுக்கு பிறகு அண்ணாமலை 2021-ல் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கும் மேல் அப்பதவியில் அவர் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியானபடி இருந்தது. அண்மையில் டெல்லியில் பாஜக தலைவர்களை இபிஎஸ் சந்தித்தபிறகு இது உறுதியானது. புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வானதால், அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து அண்ணாமலை விடை பெற்றார்.
வருகிற 14ம் தேதி (திங்கட்கிழமை) தமிழ் புத்தாண்டு ஆகும். இது அரசு விடுமுறை தினமாகும். இதனால் வருகிற 14ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களும் அடைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும் திங்கட்கிழமை விடுமுறை. தற்போது நடைபெற்றுவரும் பொதுத் தேர்வுகளும் திங்கட்கிழமை நடக்காது.
Sorry, no posts matched your criteria.