India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக தலைமையை மிரட்டி பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் மக்கள் தக்கப்பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர்; சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழகத்தை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்துக்கு மக்கள் தக்க விடையளிப்பார்கள் என கூறியுள்ளார்.
பாஜக உடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காரைக்காலைச் சேர்ந்த முன்னாள் MLA கேஏயு.அசனா அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். 2021 அதிமுக படுதோல்விக்கு காரணம் BJP உடன் கூட்டணி வைத்ததுதான். அப்படி இருந்து மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது சிறுபான்மை மக்களை வேதனையடையச் செய்துள்ளது. இதனால், அதிமுகவில் இருந்து விலகுவதாகவும், அடுத்தக்கட்ட முடிவு விரைவில் அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
RSS எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்? என்று மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். SC தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ என எச்சரித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாமகவினர் விரும்பும் வலிமையான கூட்டணியை அய்யா வழிகாட்டுதலுடன் அமைக்க போவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 2024இல் கூட்டணி அமைப்பதில் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகவே இருவருக்கும் பிரச்னை எழுந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்ததுதான் தமிழக அரசியலில் தற்போது பேசுபொருள். குறிப்பாக, கனிமொழி, ஸ்டாலின் என வரிசையாக அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி, 2026 தேர்தலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு தக்க பாடம் புகட்டப்படும். இபிஎஸ் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ரியல் மேட்ரிட் மற்றும் நெதர்லாந்து கால்பந்து அணிகளின் முன்னாள் பயிற்சியாளர் லியோ பீன்ஹாக்கர் (82) காலமானார். அவர் பயிற்சியாளராக இருந்தபோதுதான், ரியல் மேட்ரிட் அணிக்கு 3 முறை லாலிகா கோப்பைகளையும், ஒருமுறை கோபா டெல் ரே கோப்பையையும், 2 முறை சூப்பர் கோபா கோப்பைகளையும் வென்றுள்ளது. அவரது மறைவுக்கு ரியல் மேட்ரிட் அணியின் நிர்வாகம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.
▶1919இல் ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்தது, இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ▶1954இல் சென்னை மாநில முதலமைச்சராக காமராஜர் பதவி ஏற்ற நாள் ▶1930இல் காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் தொடங்கப்பட்டது. ▶இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான இந்துஸ்தானி லால் சேனை (இந்திய செம்படை) என்ற இராணுவ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
2019 மே 28-ல் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, அதற்கு அடுத்த ஆண்டில் அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் இணைந்த அவருக்கு, மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து, 2021 ஜூலை 8-ல் அக்கட்சியின் மாநிலத் தலைவராக உருவெடுத்தார். சுமார் 4 ஆண்டுகளாக வகித்த அந்த பதவியில் இருந்து தற்போது விடைபெற்ற அண்ணாமலைக்கு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியுள்ளது.
கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமாகி, வழக்கு எண் 18/9, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீ. பெரிய நட்சத்திர நடிகராக வலம்வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆளே அடையாளம் தெரியாமல், மெலிந்த தேகத்துடன் இருக்கும் அவரின் PHOTO வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், சினிமா வாய்ப்பு இல்லாததால், Depression ஆகி, போதைப் பழக்கத்திற்கு அடிமையானதாக கமெண்ட் செய்கின்றனர்.
▶தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேற முடியாது. ▶அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு. ▶எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். ▶உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
Sorry, no posts matched your criteria.