India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணிவரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நாகையில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ₹600 – ₹800 வரை விற்பனையான வஞ்சிரம் இன்று ₹1,000-க்கும், ₹200 – ₹300 வரை விற்கப்பட்ட சங்கரா கிலோ ₹600-க்கும் விற்பனையாகிறது. நாளை(ஏப்.14) முதல் ஜூன் 15 வரை வங்கக்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். இதனால் வரும் நாட்களில் மீன்கள் விலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
மே.வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்ஃப் வாரிய சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 3 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய படைகளை அனுப்புமாறு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. வன்முறை குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு ஏப்.17 க்கு வழக்கை ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து முர்ஷிதாபாத்தில் 600 BSF வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அசைவ பிரியர்களின் விருப்பமான உணவு மட்டன். அதிக கொழுப்பு நிறைந்தது என்பதால், இதனை அளவோடு சாப்பிட வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள். ஆரோக்கியமான நபர் வாரத்திற்கு 300 கிராம் வரை மட்டன் சாப்பிடலாமாம். ஜிம் பாய்ஸ் என்றால் அரைகிலோ வரை அனுமதி. கொலஸ்ட்ரால், இதயம் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்கள் 100 கிராமுக்கு மேல் தாண்டக்கூடாதாம். ஆரோக்கியத்தை பார்த்துக்கோங்க! உங்க கருத்தையும் கமெண்ட் பண்ணுங்க!
கடமைகள் நிறைந்த வாழ்வில் குடும்பத்துக்காக ஓடுபவர்களே! ஒரு நிமிடம் அந்த ஓட்டத்தை நிறுத்தி, உங்களுக்காக ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என யோசியுங்கள். இயற்கையின் கொடையான வாழ்க்கையில் நமக்கென கொஞ்சம் நேரம் வேண்டும். கடமையை விட்டு, கனவுகளை நோக்கி ஓடுங்கள் என கூறவில்லை. பிடித்த படம், நண்பரை சந்திப்பது என மன நிறைவை கொடுக்கும் சின்ன சின்ன விஷயங்களை செய்யுங்கள். அன்றைய நாள் அழகாகும்.
BJP- ADMK கூட்டணி அமைந்த நிலையில், முதல் கட்சியாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. 2026ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று EPS முதலமைச்சராக பொறுப்பேற்க எல்லா வகையிலும் பணியாற்றுவோம் என அக்கட்சியின் தலைவர் நாகராஜன் அறிவித்துள்ளார். அதியமானின் ஆதித்தமிழர் பேரவை திமுக பக்கம் இருக்கும் நிலையில், இவர் அதிமுக பக்கம் சாய்ந்துள்ளார். இதனால் அருந்ததியர் மக்கள் வாக்கு சிதற வாய்ப்புள்ளது.
மகாவீர் ஜெயந்தியை போல், புனித வெள்ளிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காததில் ஏமாற்றம் அளிக்கிறது. உயிரை குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் அரசுக்கு என்ன தயக்கம் எனக் கேள்வி எழுப்பிய அவர், கிறிஸ்தவர்களின் கோரிக்கைக்கு அரசு மதிப்பளிக்காதது, அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் எனத் தெரிவித்தார்.
கோவையில் உள்ள RK நேச்சர் க்யூர் ஹோம் ஆயுர்வேத ஹாஸ்பிடலில் ஓபிஎஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு புத்துணர்வு மையமாகும். இங்கு நீராவி குளியல், மூலிகை எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 2 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வரும் ஓபிஎஸ், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இது வழக்கமான சிகிச்சை தான், மற்றபடி அவருக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை என கூறப்படுகிறது.
MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு, எந்தப் பொறுப்பும் அறிவிக்கப்படவில்லை. அண்ணாமலை, சரத்குமார், வானதி, தமிழிசை உள்ளிட்டோர் தேசிய பொதுக்குழு உறுப்பினராக பதவியேற்றனர். ஆனால், புதிய பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த விஜயதாரணிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர், கட்சியிலிருந்து விலகலாம் என கூறப்படுகிறது.
நயினார் நாகேந்திரனுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. 2026 தேர்தலில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளில் வெற்றியை தேடித் தர வேண்டிய பொறுப்பும், கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டிய கடமையும் அவருக்கு உள்ளது. மாநிலத் தலைவராக ஏற்கெனவே இருந்த பல தலைவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய அவசியமும் உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய சவாலும் காத்திருக்கிறது.
Sorry, no posts matched your criteria.