India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறையை கழிக்க பலரும் ஜில்லென இருக்கும் ஸ்ரீநகர், மணாலி, டேராடூன் போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதையொட்டி, அங்கு செல்வதற்கான விமானக் கட்டணம் 48% வரை அதிகரித்துள்ளது. எனினும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 2.4%தான் கட்டணம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விடுமுறைக்கு நீங்க எங்கே சுற்றுலா பாேகப் போறீங்க?
இரவு 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அவை எவை-எவை? இடி-மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு: தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நெல்லை, குமரி. இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு: திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், ஈரோடு, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி.
சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது. மே 1-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் காமிக்ஸ் வடிவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
<<16101772>>RLJP<<>> கட்சி ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு 2 பிரிவுகளாகச் செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் சகோதரர் பசுபதி குமார் பராஸ் தலைமை வகிக்கிறார். இன்னொரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமை தாங்குகிறார். இதில் பராசுக்கு மத்திய அமைச்சர் பதவியும் முன்பு அளிக்கப்பட்டது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அவர் அப்பதவியை ராஜினாமா செய்தார்.
சமூக நன்மைக்காக கேப்டன் விஜயகாந்த் பல விஷயங்கள் செய்துள்ளதாக பிரதமர் மோடி X போஸ்ட் செய்துள்ளார். மோடி குறித்த ஆவணப்படம் ஒன்றில், விஜயகாந்துக்கும் மோடிக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக பிரேமலதா பேசியிருந்தார். அதற்கு பதிலளித்திருக்கும் மோடி, தனது இனிய நண்பர் விஜயகாந்துடன் பல ஆண்டுகள் கலந்துரையாடி, நெருக்கமாக பணியாற்றியதை நினைவு கூர்ந்துள்ளார்.
➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – உதவி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – நற்செயல் ➤சிம்மம் – சிந்தனை ➤கன்னி – சிக்கல் ➤துலாம் – வரவு ➤விருச்சிகம் – பரிசு ➤தனுசு – சினம் ➤மகரம் – விருத்தி ➤கும்பம் – பாராட்டு ➤மீனம் – ஜெயம்.
வெயிலுக்கு பலியாவோர் குறித்து தினமும் அறிக்கை அனுப்பும்படி, மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதில் நேரிடும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தில் உள்ள IHIP ஆய்வு நடத்தவுள்ளது. இதற்காக அறிக்கை அனுப்பும்படியும், வெயில் நோய்களை எதிர்காெள்ள தயாராக இருக்கும்படியும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP) விலகுவதாக அக்கட்சி முக்கிய தலைவர் பசுபதி குமார் பராஸ் அறிவித்துள்ளார். இந்த கட்சிக்கு 5 எம்பிக்கள் உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர் கூறியுள்ளார். தங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், ஆதலால் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் முக்கிய தலைவரான சிராக் பாஸ்வான் ஏதும் கூறவில்லை.
மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு RBI சூப்பர் பரிசு கொடுத்துள்ளது. RBI-யின் புதிய விதிகளின்படி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை சரியான நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கி ஆண்டுக்கு 8% வட்டியை அவர்களுக்கு செலுத்த வேண்டும். இந்த விதி அக்டோபர் 1, 2008-க்குப் பிறகு தாமதமான அனைத்து ஓய்வூதிய வழக்குகளுக்கும் பொருந்தும்.
RTE திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை இலவசமாக பயிலலாம். இதற்காக 25% இடஒதுக்கீடு உள்ளது. தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தோர் <
Sorry, no posts matched your criteria.