news

News April 15, 2025

IPL தொடரில் இருந்து வெளியேறிய பஞ்சாப் வீரர்

image

பஞ்சாப் அணி வீரர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக நடப்பு IPL சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். SRH-க்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த நிலையில் அவர் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி இந்தாண்டாவது அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?

News April 15, 2025

டபுள் ரோலில் நடிக்கும் ஆளுநர்.. அமைச்சர் விமர்சனம்

image

சனாதனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக பேசிக் கொண்டிருக்கும் ஆளுநர், சனாதனத்தை எதிர்த்த அம்பேத்கரை புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது என்று அமைச்சர் கோவி செழியன் சாடியுள்ளார். இனிப்பும், உப்பு எப்படி ஒரே சுவை தர முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே தலித் மக்களை பற்றிக் கவலைப்படுகிறீர்களே, உங்களின் டபுள் ரோல் நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 307 ▶குறள்: சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. ▶பொருள்: நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

News April 15, 2025

ஜூனில் ‘குபேரா’ ரிலீஸ்

image

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகவுள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டரில் தனுஷ் விசில் அடித்து செம குத்து டான்ஸ் போடுகிறார்.

News April 15, 2025

‘மாநில சுயாட்சி’ தீர்மானம் இன்று தாக்கல்

image

சட்டமன்றத்தில் இன்று ‘மாநில சுயாட்சி’ தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். நீட், மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

News April 15, 2025

LION (DHONI) COMEBACK

image

LSG-ஐ CSK வீழ்த்திய நிலையில், சிறப்பாக விளையாடிய தோனிக்கு 6 வருடங்களுக்குப் பிறகு ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. IPL வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிக வயதான வீரர் தோனிதான்(43). 11 பந்தில் 26 ரன்கள் எடுத்த தோனி, ஆயுஷ் பதோனியை ஸ்டெம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக 200-வது ஆட்டமிழப்பை பதிவு செய்தார். அத்துடன் அப்துல் சமத் விக்கெட்டை மிரட்டலான ரன் அவுட் மூலம் கைப்பற்றி அசத்தினார்.

News April 15, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் – சித்திரை- 02 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3 : 00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9 :00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை

News April 15, 2025

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதன் பாதிப்பு விவரம் உடனே வெளியாகவில்லை.

News April 15, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 15, 2025

Retired out குறித்து மனம் திறந்த திலக் வர்மா

image

அதிரடி வீரரான திலக் வர்மா LSGக்கு எதிரான போட்டியில் retired out செய்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மிட்செல் சான்ட்னரை விட திலக் திறன் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதால் அது சர்ச்சையானது. இதுகுறித்து தற்போது பேசியுள்ள திலக் அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அது. அதை நான் நேர்மறையாகவே எடுத்துக்கொண்டேன் என தெரிவித்தார். அதன் பின் நடைபெற்ற 2 ஆட்டங்களில் திலக் அதிரடி காட்டி அசத்தினார்.

error: Content is protected !!