India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிக Stress, டென்ஷனால் கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்துவிட்டதா? கருவளையம் வந்துவிட்டதே என எண்ணி மேலும் Stress ஆகுறீங்களா? கவலைய விடுங்க. இதனை எளிமையான முறையில் சரி செய்யலாம். உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதை ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கருவளையம் நீங்கும். SHARE.

சமீப காலமாக OPS ஆதரவாளர்கள் பலர் திமுக, அதிமுக என பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவில் இருந்து விலகி OPS உடன் பயணித்துவந்த தர்மர் MP, மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் EPS முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகுவது OPS-க்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்புக்கு பின், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா பெருமளவு குறைத்துள்ளது. இது உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவின் வருவாயைக் குறைக்கும் US-ன் முயற்சிக்கு ஒரு வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரியை அமெரிக்கா குறைக்க வாய்ப்புள்ளதாக US நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசண்ட் உலகப் பொருளாதார மன்றத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

TN-க்கு எதிரான கொள்கைகளில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என சீமான் விமர்சித்துள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு, இலங்கை தமிழர்கள் பிரச்னையில் இரு கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க தயாரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக Sound இந்துத்துவா, காங்கிரஸ் கட்சி Soft இந்துத்துவா எனவும் சாடினார்.

மகன் <<18931928>>முரளி கிருஷ்ணா<<>> இறந்த துக்கத்தில் பாடகி எஸ்.ஜானகி மறைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தியுள்ள ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா, குடும்பத்தினர், நண்பர்களின் அரவணைப்பில் எஸ்.ஜானகி நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் வதந்தி பரப்பப்படுகிறது. தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி கடந்த 17 நாள்களாக பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே <<18942504>>சிறப்பு மதிப்பெண்கள்<<>> மூலம் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என CM ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் CM ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பின்னர், போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அவர்கள் அறிவித்தனர்.

பெண் ஊழியர்களின் 3-வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோரி ஐகோர்ட்டில் பணியாற்றும் மங்கையர்கரசி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இனி, இந்த உத்தரவை மேற்கோள்காட்டி, அரசு, தனியார் பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் பலரும் தங்கள் ஏரியாவில் பிரபலமானவர்களை திமுகவில் இணைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று வருகின்றனர். இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒருபுறம் பாதகமாக மாறியுள்ளது. தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.

பாதுகாப்பு காரணங்களால் வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற BCB கோரிக்கை வைத்தது. இதை ஏற்காத ICC அவர்களை டி20 WC-ல் இருந்து நீக்கியது. தற்போது வங்கதேசம் இடம்பெற்ற C பிரிவில் அவர்களுக்கு பதில், ஸ்காட்லாந்து இடம்பெற்றுள்ளது. C பிரிவில் இப்போது நேபாள், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குடியரசு தினத்தையொட்டி தற்போது பள்ளி மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜன.28-ல் 3 தாலுகாவிலும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய, பிப்.7-ம் தேதி பணிநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.