India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி வரும் 19ல் ஸ்டிரைக் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்சி டிரைவர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு தர வேண்டும் என அந்த கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கால் டாக்சி APPகளை கட்டுப்படுத்த அரசே ஒரு ஆட்டோ APPஐ தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்னர் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். சென்னை அருகே பண்ணூரில் பேசிய அவர், மொழியை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். தமிழ் மொழி வரலாற்று தொன்மை உடையது என்பதை ஏற்பதாகவும், உலக சொத்துக்களில் ஒன்றாக தமிழ் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹104ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ ₹10 வரை உயர வாய்ப்புள்ளது. முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ₹65 ஆகவும் நீடிக்கிறது.
ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 2ஆவது முறையாக அவர் வியட்நாம் செல்வதாகவும், புத்தாண்டு கொண்டாட சென்ற ராகுல் அங்கு 22 நாள்கள் இருந்ததாகவும் விமர்சித்துள்ளார். தனது தொகுதிக்கு கூட செல்லாமல் ராகுல் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து செல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த சமந்தா தற்போது ஹிந்தி வெப் சீரிஸிலும் அசத்தி வருகிறார். இதனிடையே ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய சமந்தா, ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்துள்ளனர். படம் மீது மிகுந்த நம்பிக்கையில் உள்ள சமந்தா விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், யார் எல்லாம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. * புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், * கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள், *தவறான காரணங்களால் பெயர் விடுபட்டவர்கள், *அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோர் ₹1000 பெற விண்ணப்பிக்கலாம்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அறிமுகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் மெக்வால் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது, அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 1952, 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
WPL-லின் முதல் சீசனிலிருந்தே சிறப்பாக விளையாடி வரும் டெல்லி அணி இறுதி போட்டியில் மட்டும் ஏனோ சொதப்பிவிடுகிறது. 2023ல் மும்பை அணியிடமும், 2024ல் பெங்களூருவிடமும் கோப்பையை பறிகொடுத்த டெல்லி, நேற்று மீண்டும் மும்பையிடம் வீழ்ந்தது. IPL-லில் தான் டெல்லி அணியால் சாம்பியன் ஆக முடியவில்லை என்றால் WPL-லிலும் அதே சோகம் தொடர்கிறது. DC-யின் புதிய கேப்டன் அக்ஷர் பட்டேல் கோப்பையை வெல்வாரா?
விழுப்புரத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே, இன்று அதிகாலை பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை.
Sorry, no posts matched your criteria.