India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓபிஎஸ் அணி, தமாகா தவிர்த்து மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை பாஜக நிறைவு செய்துள்ளது. அந்தவகையில், பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தேவநாதன் யாதவ் கூறும்போது, தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கேட்டுள்ளதாகவும், தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம் என்றும் கூறினார்.

ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டில் போர் வேண்டாமென சிவப்பு மையில் எழுதிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், ராணுவத்தை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபட்டதாக அலெக்ஸாண்ட்ரா சிரியாட்டியேவா மீது குற்றம்சாட்டிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம், 8 நாள்கள் சிறையுடன், 40,000 ரூபிள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

➤தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ➤பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ➤ திருச்சியில் நாளை (மார்ச் 22) மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார். ➤குஜராத் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு செய்தவர்களில் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் அடங்குவர். ஆனால் பிரதான அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே நம்ம நாட்டில் குனிந்து, குனிந்து ஓட்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருக்காரென நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு செய்த பின்னர் பேசிய அவர், ‘பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி சின்னமாக கேட்டுள்ளேன். லாரிக்கு தூய தமிழில் சரக்கு உந்து சின்னம் கேட்டுள்ளேன். சரக்கு உந்து என்றால் அந்த சரக்கு இல்லை’ என்றார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷமிக்கு பதிலாக தமிழக அணி வீரர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்குகிறது. கணுக்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கும் ஷமி, ஐ.பி.எல் தொடரிலிருந்தும் விலகினார். இதனையடுத்து அவருக்குப் பதிலாக சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர், ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழக அணிக்கு விளையாடினார்.

▶மார்ச் 21 ▶பங்குனி – 8 ▶கிழமை: வியாழன் ▶ திதி: துவாதசி ▶நல்ல நேரம்: காலை 10.30 – 11.30 ▶கெளரி நேரம்: காலை 12.30 – 01.30, மாலை 06.30 – 07.30 ▶ராகு காலம்: மதியம் 01.30 – 03.00 ▶எமகண்டம்: காலை 06.00 – 07.30 ▶குளிகை: காலை 9.00 – 10.30 ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் எம்.எல்.ஏவான பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குமாறு முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க, ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

அயோத்தி ராமர் கோயிலுக்குத் தனது கணவர், குழந்தையுடன் சென்ற பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சாமி தரிசனம் செய்தார். கடந்த 2018இல் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்காவுக்கு, மால்டி என்ற பெண் குழந்தை உள்ளது. அமெரிக்காவில் செட்டிலாகி விட்டாலும், பாரம்பரியத்தை மறக்காமல் பிரியங்கா மஞ்சள் நிற சேலை, நிக் ஜோனஸ் வெள்ளை குர்தா அணிந்தும், தங்கள் குழந்தையுடன் சென்று ராமரை வழிபட்டனர்.

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கும் ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். முதல்வர் பிரச்சாரத்துக்கு குறித்த காலத்திற்கு செல்ல வேண்டுமென்பதால், வழியில் வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய கூடாதென திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.