India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள 21,413 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு மார்ச் 3 வரை நடைபெற்றது. இந்த விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா, இல்லையா என்பதை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு <
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் (பெ.ம.க.) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளை கட்சியிலிருந்து அக்கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் நீக்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ்.பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ். தேவராஜ் ஆகியோர் கட்சியின் கொள்கை, கோட்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆதலால் 2 பேரும் நீக்கப்படுவதாகவும் என்.ஆர். தனபாலன் கூறியுள்ளார்.
ரயில் பயணத்தின்போது அதில் விற்கப்படும் உணவுகள் சிலருக்கு விருப்பமில்லாது போகலாம். அத்தகைய நபர்களுக்கு ரயில்வே சிறப்பு வசதி செய்து தந்துள்ளது. இதற்கு ரயில்வேயின் IRCTC இணையதளம் சென்று நாம் ஆர்டர் செய்யலாம். அதாவது <
9 மாதங்களுக்கு பின் விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்ப உள்ளார். புவியீர்ப்பு விசை இல்லாமல் இருந்ததால், அவருக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சுனிதாவின் கால்கள் பிறந்த குழந்தையின் கால் போன்று மென்மையாக மாறி இருக்கும் என்றும், அதனால் நடக்கும்போது வலி ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதயத் துடிப்பிலும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அதிமுகவின் உதயகுமார் கொண்டுவந்த தீர்மானம் நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. தீர்மானத்தின் மீது உதயகுமார் பேசியதை அடுத்து, முதல்வரோ, அவை முன்னவரோ விளக்கம் அளிப்பர். இதனையடுத்து, குரல் வாக்கெடுப்பு (அ) டிவிஷன் முறைப்படி வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுக்கப்படும். பேரவையில் திமுகவின் பலம் 133 ஆகவும், அதிமுகவின் பலம் 66 ஆகவும் உள்ளது.
பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கடத்தி பெரிய தாக்குதலை நடத்திய BLA இயக்கத்தினர், பாக்., அரசுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளனர். குவெட்டாவில் இருந்து டஃப்டான் நோக்கி சென்ற 7 ராணுவ வாகனங்கள் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக BLA அறிவித்துள்ளது. ஆனால், 7 வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
பிரபல ஒடியா கவிஞரும், ஒடிஷா EX CS-மான ரமாகாந்த் ரத் காலமானார். அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட இரங்கலில், தனது மறக்க முடியாத படைப்புகளால் ரமாகாந்த் அகில இந்திய இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்ட இரங்கலில், ரமாகாந்த் மறைவு மிகுந்த வேதனையை அளித்ததாக கூறியுள்ளார். ரமாகாந்த், சாஹித்ய அகாடமி, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி. டி20, ODI போட்டிகளில் கலக்கும் அவருக்கு, டெஸ்ட் அணியிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என குரல்கள் எழுகின்றன. ஆனால், டெஸ்ட் போட்டிகளுக்கு தனது பந்துவீச்சு பொருத்தமாக இருக்காது என வருண் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 20 – 30 ஓவர்களை தன்னால் வீச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுவால் BP, கல்லீரல், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் என ஏராளமான நோய்கள் வரும். ஆனால், மது அருந்துவதால் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் (LDL) குறைந்து, நல்ல கொலஸ்டிரால் (HDL) அதிகரிக்கிறது என்கிறது ஹார்வர்ட் ஆய்வுமுடிவு. ‘அப்ப குடிக்கலாமா?’ என்று கேட்டால், ‘நல்லது, கெட்டதை ஒப்பிட்டால் குடியை விடமுடியாதவர்கள் அளவாக குடிக்கலாம். பழக்கம் இல்லாதவர்கள் குடிக்காமல் இருப்பதே நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தமிழக வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாள்கள் விடுமுறை என்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஏப்ரல் 1 – அக்கவுண்ட் க்ளோஸிங் விடுமுறை, ஏப்ரல் 14 – அம்பேத்கர் ஜெயந்தி விடுமுறை, ஏப்ரல் 18 – புனித வெள்ளி விடுமுறை, ஏப்ரல் 12, 26 – இரண்டாம் & நான்காம் சனி விடுமுறை என 5 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல வங்கிகள் செயல்படாது.
Sorry, no posts matched your criteria.