news

News March 17, 2025

பக்தர் பலி: டிடிவி கண்டனம்

image

திருச்செந்தூர் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற துயர சம்பவம் நிகழ, இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டிய அவர், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்க முறையாகத் திட்டமிட வேண்டும் என திமுக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.

News March 17, 2025

முருங்கைப் பூவின் முத்தான மருத்துவ குணங்கள்!

image

*முருங்கைப் பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
*முருங்கைப் பூ உடல் வலிக்கு நிவாரணம் தரும்.
*மன அழுத்தம், மனச்சோர்வை குறைக்கும் வல்லமை கொண்டது.
*தாது பலனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
*மாதவிடாய் பிரச்னைகளை தணிக்கும்
*நோய் எதிர்ப்பு மண்டலத்தை முருங்கைப் பூ பலப்படுத்தும்.

News March 17, 2025

சமந்தா தயாரித்த படம் ரிலீஸுக்கு ரெடி

image

சமந்தா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சுபம்’ படம், ரிலீஸுக்கு தயாராக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இவர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். கோடை விடுமுறையில் படம் ரிலீஸாகும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

மார்ச் 17: வரலாற்றில் இன்று

image

*1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் பேரரசன் ஆனான்.
*1861 – இத்தாலி இராஜ்ஜியம் உருவானது.
*1958 – ஐக்கிய அமெரிக்கா, வங்கார்ட் 1 என்ற செயற்கைக்கோளை ஏவியது.
*1996 – உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

News March 17, 2025

RBIக்கு விருது: PM மோடி பாராட்டு

image

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை பாராட்டியுள்ள PM மோடி, நிர்வாகத்தில் புதுமை மற்றும் செயல்திறன் மீதான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு மகத்தான சாதனை எனப் புகழ்ந்துள்ளார். மேலும், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் நிதி சூழல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எண்ணற்ற உயிர்களை மேம்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 17, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: தீவினையச்சம்
▶குறள் எண்: 209
▶குறள்: தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
▶பொருள்: தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.

News March 17, 2025

திமுகவின் ஊழல் குறித்து படமே எடுக்கலாம்: தமிழிசை

image

திமுகவின் ஊழல் குறித்து ஒரு திரைப்படமே எடுக்கலாம் என தமிழிசை விமர்சித்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பான ED அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் வெளியிட்ட அறிக்கையை ஆமோதித்த அவர், இந்த விவகாரத்தில் விஜய் கூறியது சரிதான் என்றார். முன்னதாக விஜய் வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக் மோசடி குறித்து ED பயன்படுத்திய வார்த்தையை பார்த்தால், திமுக அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதலாம்” எனக் கூறியிருந்தார்.

News March 17, 2025

இன்றைய (மார்ச் 17) நல்ல நேரம்

image

▶மார்ச்- 17 ▶பங்குனி 3 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM- 03:00 PM ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மூலம் ▶நட்சத்திரம் : பூசம்.

News March 17, 2025

இந்தியா வருகை தந்துள்ள நியூசிலாந்து பிரதமர்

image

5 நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இந்த 5 நாள் பயணத்தின்போது, ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, இருதரப்பு வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 17, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!