India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பற்றி எரிந்து வரும் சூழலில், அதற்கு இன்ஃபோசிஸின் முன்னாள் CFO மோகன்தாஸ் பாய் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் பணியாற்ற கூடுதல் மொழி அறிவு நிச்சயம் பயன்படும் என அவர் கூறியுள்ளார். மும்மொழிக் கொள்கை இந்தியர்களின் பணித்திறனுக்கும் பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட் செய்யுங்கள்!
தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் இபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
மகளிர் சுய உதவிக்குழுவில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கிய பின், வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும். அதேபோல், அரசின் பல்வேறு நல உதவிகளும், அவ்வப்போது அறிவிக்கப்படும் பலன்களும் சென்றடைய வழி ஏற்படும்.
கேப்டன் COOL என பெயர் வாங்கிய தோனி, ஒருமுறை அந்த மனநிலையை இழந்துவிட்டதாக மனம் திறந்திருக்கிறார். 2019ல் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது மைதானத்திற்குள் சென்று நோ பாலுக்காக வாதிட்டது, தான் செய்த மிகப் பெரிய தவறு என ஒப்புக் கொண்டுள்ளார். கூலான மனநிலையை எப்போதாவது இழந்ததுண்டா என்ற கேள்விக்கு தோனி இந்த பதிலை அளித்துள்ளார். பெரிய வீரர் என்றாலும், அவரும் மனிதர் தானே!
போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்யும் புதிய போட்டோவை வாடிகன் மாளிகை வெளியிட்டுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதனிடையே, ஜெமில்லி ஹாஸ்பிடலில், சக பாதிரியார்களுடன் திருப்பலியில் ஈடுபட்ட போப், தான் நலமுடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
கும்பமேளா நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த சம்பவத்தை, மரண கும்பமேளா என மே.வங்க CM மம்தா விமர்சித்திருந்தார். இந்நிலையில், பர்கானாஸில் ஹோலியின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் பலியானதை சுட்டிக்காட்டியுள்ள உ.பி CM யோகி ஆதித்யநாத், சிறிய தொந்தரவுகளை கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள், மகாகும்பமேளாவை விமர்சிக்கின்றனர் என்றார். நடந்தது மரண கும்பமேளா இல்லை; மரணத்தை வென்ற கும்பமேளா என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்களாக தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புவார் என நாசா உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பேஸ்X விண்கலம் மூலம் ISSல் இருந்து சுனிதா வில்லியம்ஸூம், புட்ச் வில்மோரும் உள்ளூர் நேரப்படி நாளை மாலை 5.57 மணிக்கு பூமிக்கு திரும்புவார்கள். அதன் பின் கேப்சூல் மூலம் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கடற்கரையில் தரையிறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை பிந்துகோஷ் சிகிச்சைக்காக உதவி கேட்டும், முன்னணி நடிகர்கள் யாரும் உதவி செய்யவில்லை. தவிர, அவர் இறந்துவிட்டதாக பல முறை வதந்திகள் தான் வந்தன; ஆனால், இப்போது நிஜமாகவே பிரிந்து சென்றுவிட்டார். அவரது கடைசி நொடிகளும், கண்ணீரும் வலியுமாய் கரைந்துவிட்டது. அவர் மறைவை அடுத்து, ‘வாழும்போது நிம்மதியில்லாமல் வாழ்ந்த நீங்கள், இனியாவது நிம்மதியாக உறங்குங்கள்’ என பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி தன்னிடம் ₹2.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக 60 வயது மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், காபி பவுடர் கம்பெனிக்கு கிறிஸ் கெயில் தான் புரமோட்டராக இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதில் தனது சகோதரர் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதியின் 51வது படமாக உருவாகும் ‘Ace’ படத்தின் முதல் பாடலான ‘உருகுது உருகுது’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. டைட்டில் டீசர் வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோடை விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.