news

News March 17, 2025

அப்பாவு கனிவானவர், கண்டிப்பானவர்: ஸ்டாலின்

image

சபாநாயகர் அப்பாவு கனிவானவர், கண்டிப்பானவர் என CM ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், ஜனநாயக கொள்கையில் நம்பிக்கை உடையவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதும் பாசமும், பற்றும் உடையவர் என பாராட்டியுள்ளார். உண்மைக்கு முரணான செய்திகள் தீர்மானத்தில் உள்ளன. எதிர்க்கட்சியினரின் அம்பை இந்த அவை ஏற்காது என தெரிவித்தார்.

News March 17, 2025

BREAKING: நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

image

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அறிவித்துள்ளார். அதிமுகவினர் கொண்டுவந்த இந்த தீர்மானத்தின் மீது காலை முதல் விவாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை அப்பாவுவே நடத்த முடியாது என்பதால் பிச்சாண்டி நடத்தினார். அப்போது, குரல் வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு எதிரான வாக்குகள் அதிகம் வந்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது.

News March 17, 2025

டிவிஷன் முறை வாக்கெடுப்பை கேட்டார் EPS

image

சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை டிவிஷன் முறையில் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் EPS கோரிக்கை வைத்துள்ளார். தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியவுடனே சபாநாயகர் அப்பாவு வெளியேறிவிட்டார். இந்நிலையில், பேரவைச் செயலாளர் முன்னிலையில் டிவிஷன் முறை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அதிமுக முன்வைத்துள்ளது.

News March 17, 2025

மாருதி சுசூகி கார்கள் விலை 4% உயருகிறது

image

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி வரும் 1ஆம் தேதி முதல் கார்கள் விலையை 4% வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் 1.99% உயர்ந்து ₹11,737.10 ஆக BSE சந்தையில் வர்த்தகமாகிறது. மாருதி சுசூகி பிப்ரவரி 2025 மாதத்தில் மொத்தமாக 1,99,400 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அதே மாதத்தில் விற்பனையான 1,97,471 யூனிட்களை விட, 0.97% அதிகமாகும்.

News March 17, 2025

தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக எதிர்ப்பு

image

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வாக்கெடுப்பின்போது காங்கிரசின் 17 உறுப்பினர்களும் விசிகவின் 4 உறுப்பினர்களும் அப்பாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். பாஜக, பாமக ஆகிய கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

News March 17, 2025

டிவிஷன் வாக்கெடுப்பு என்றால் என்ன? (1/2)

image

சட்டப்பேரவையில் தீர்மானங்களின் மீது 3 வகையில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. (1) குரல் வாக்கெடுப்பு (2) வாக்குச்சீட்டு முறை வாக்கெடுப்பு (3) டிவிஷன் முறை வாக்கெடுப்பு. இதில், முக்கிய பிரச்னைகள் மீது டிவிஷன் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வாக்கெடுப்பின்போது, சட்டப்பேரவையின் கதவுகள் அடைக்கப்படும். பங்கேற்கும் உறுப்பினர்கள் இடம் மாறி உட்காரக்கூடாது.

News March 17, 2025

டிவிஷன் வாக்கெடுப்பு என்றால் என்ன? (2/2)

image

சபாநாயகர் அல்லது செயலாளர் தீர்மானத்தை படித்துவிட்டு, ஆதரவு தெரிவிப்போரை டிவிஷன் வாரியாக எழுந்து நிற்கச் சொல்வார். தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. அதன்பின், எதிர்ப்பு தெரிவிப்போர் & நடுநிலையானோரை எழுந்து நிற்கச்சொல்லி, அவர்களது பெயர்கள் குறித்துக் கொள்ளப்படும். இறுதியில் தீர்மானம் வென்றதா இல்லையா என்று அறிவிக்கப்படும்.

News March 17, 2025

சுனிதாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

image

9 மாதங்களாக விண்வெளியில் <<15786194>>மாட்டிக் கொண்டுள்ள<<>> சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவருக்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா? அமெரிக்காவின் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிக அதிகமான GS-15 சம்பள பிரிவில் இருப்பதால், இந்திய மதிப்பில் ₹1.08 முதல் ₹1.41 கோடி வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் வேலை நாட்களுக்கு ஒரு நாளைக்கு ₹347 என்ற அளவில், 9 மாதங்களுக்கு மொத்தம் ₹1 லட்சம் தான் கூடுதலாக கிடைக்குமாம்.

News March 17, 2025

அப்பாவு ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: EPS

image

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசிய EPS, பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பல நேரங்களில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதை நேரலையில் வழங்குவதில்லை ஆகிய குற்றச்சாட்டுகளை EPS கூறினார். சபாநாயகர் அவையில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

News March 17, 2025

ஊர் அறியட்டும் தமிழரின் பெருமை

image

தமிழர்களின் நிதி நிர்வாகம் குறித்த ‘தமிழர் நிதி நிர்வாகம் – தொன்மையும் தொடர்ச்சியும்’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். நிதித்துறை சார்பில் தொகுக்கப்பட்டிருந்த இந்நூலில், பண்டைய தமிழரின் நிதி மேலாண்மை குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான சிறப்பு இணையதள பக்கத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம், தமிழர்களின் சிறப்பான நிதி நிர்வாகத்தை உலகம் அறியும்.

error: Content is protected !!