India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
KKR அணிக்கு எதிரான IPL போட்டியில் GT அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த GT அணியின் கில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். மேலும், சாய் சுதர்ஷன் & ஜோஸ் பட்லரின் அதிரடியால் அந்த அணி 198 ரன்கள் குவித்தது. அதனை சேஸ் செய்த KKR அணியின் கேப்டன் ரஹானே மட்டும் 50 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 20 ஓவர்களுக்கு 159 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.
தனியார் ஹஜ் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால், அந்த யாத்திரை செல்வோர் கவலையில் உள்ளனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு தனியாருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 42,507 இடங்கள் ரத்தானதால், தனியார் ஹஜ் யாத்திரைக்கான கட்டணம் பல லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே, இதில் வெளிப்படைதன்மையை ஏற்படுத்த அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
➤மேஷம் – பாராட்டு ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – நலம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – பரிசு ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – கீர்த்தி ➤விருச்சிகம் – உதவி ➤தனுசு – போட்டி ➤மகரம் – ஆர்வம் ➤கும்பம் – பக்தி ➤மீனம் – அன்பு.
நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி, அரசியலில் ஈடுபடுவது குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். X தளத்தில் போஸ்ட் செய்திருக்கும் அவர், தனக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்புகள் வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் அரசியலில் ஈடுபட வேண்டுமா என்றும் ஈடுபட்டால், எந்தக் கட்சியில் சேர்வது என்றும் கருத்து கூறுமாறு தனது ரசிகர்களிடம் அவர் கேட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?
சின்ன வயதில் முத்துன கத்திரிக்காயாக இருக்கும் நாட்டவர்கள் யார் தெரியுமா? பிரேசில் தானாம். சராசரியாக 17 வயது 3 மாதங்களில் அந்நாட்டு இளைஞர்கள் விர்ஜினிட்டியை இழந்து விடுகிறார்களாம். வளர்ந்த நாடான அமெரிக்காவில் 18 வயது 4 மாதங்களிலும், பிரிட்டனில் 18 வயது 3 மாதங்களிலும் ‘அந்த’ சுகத்தை பெற்று விடுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை ஒழுக்கமானவர்கள். 22 வயது 5 மாதங்களில் தான் ‘அந்த’ அனுபவம் கிடைக்கிறதாம்.
எலான் மஸ்கின் தாயார் மே மஸ்க்குடன் இணைந்து நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மே தான் எழுதிய ‘A Woman Makes A Plan’ புத்தகத்தின் ஹிந்தி மொழிபெயர்ப்பு வெளியீட்டிற்காக மும்பையில் உள்ளார். மேயின் புத்தகம், பெண்களுக்கான அடையாள சின்னம் என ஜாக்குலின் தெரிவித்துள்ளார். தாயார் இறந்த பின்பு அவர் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறையாகும்.
நிர்வாண வீடியோ கால் மூலம் மோசடி அதிகரித்து வருகிறது. வீடியோகாலில் தோன்றும் பெண்கள், திடீரென நிர்வாணமாக நிற்கின்றனர். பின்னர் எதிர்முனையில் உள்ள ஆண்களையும் நிர்வாணமாக நிற்கச் சொல்லி, அதை ரகசியமாக ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அதை வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதுபோன்ற அழைப்புகளுக்கு யாரும் அஞ்ச வேண்டியதில்லை. இதுவொரு மோசடி. ஆதலால், துணிந்து போலீசில் புகார் அளிக்கலாம். SHARE IT.
ஏலத்தின் போது நிறைய பணம் இருந்தும் திறமையான வீரர்களை எடுக்காததே CSK-வின் இன்றைய நிலைக்கு காரணம் என ரெய்னா குற்றஞ்சாட்டியுள்ளார். பண்ட், ஸ்ரேயஸ், ராகுல், பிரியான்ஸ் போன்ற திறமையான வீரர்களை எடுக்கத் தவறிவிட்டதாகவும், அணி நிர்வாகம் நல்ல வீரர்களை தேடவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், CSK இப்படி தடுமாறியதை தான் பார்த்ததே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுடன் இன்று அச்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு வேலை நிறுத்தத்தை கைவிட முடிவு செய்தனர். மேலும், நாளை முதல் (ஏப்.22) எம்.சாண்ட், பி.சாண்ட், கிரஷர் ஜல்லி விலையை ரூ.1,000 அதிகரிக்கப் போவதாக அறிவித்தனர்.
கடவுளின் இருப்பு குறித்து சந்தேகப்படுவது பாவச் செயல் அல்ல, அதுதான் மனித குலத்திற்கான வளர்ச்சி என்று எந்த மத தலைவரும் சொல்லாததை சொன்னவர் போப் பிரான்சிஸ். கத்தோலிக்க மதத்தை முற்போக்கு பாதைக்கு மாற்ற தன்னால் இயன்றதை செய்தவர். காலநிலை மாற்றம், காசா வன்முறை குறித்து பெருங்கவலை கொண்டவர். Global South என அழைக்கப்படும் வளர்ந்துவரக்கூடிய நாடுகளில் இருந்து வந்த முதல் போப்பும் பிரான்சிஸ்தான்.
Sorry, no posts matched your criteria.