India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ED சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக்கொலையில் நீதி கேட்டு திருமாவளவன் போராடினாரா என கேள்வி எழுப்பிய அவர், சமீபகாலமாக கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
‘இட்லிக்கடை’ படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக இன்ஸ்டாவில் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அதில், இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் ஆச்சர்யமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இட்லிக்கடை அக்டோபரில் வெந்துவிடும் SORRY வந்துவிடும் எனவும், மிளிரினால் என்பதை மிருணாள் என படித்தால் நான் பொறுப்பல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறவுள்ளது. பொதுக்குழுவில் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி, கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. திமுகவை அட்டாக் செய்யும் அன்புமணி, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் நிலையில், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், இன்று அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
AUS-க்கு எதிரான T20 தொடரில் 2-1 என்ற கணக்கில் SA தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில்,’பேபி டிவில்லியர்ஸ்’ என வர்ணிக்கப்படும் பிரேவிஸின் அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொடரில் 180 ரன்கள் அடித்த அவர், மொத்தம் 14 சிக்ஸர்களை பறக்கவிட்டார். AUS மண்ணில் அந்த அணிக்கெதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி(12) முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது பிரேவிஸ் முந்தியுள்ளார்.
EC-யை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தியின் வாக்குரிமையை ரத்து செய்யவேண்டுமென அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே வாக்குகளை திருடுவது காங்கிரஸும், திமுகவும்தான் எனவும், கோவையில் அண்ணாமலை ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். திருப்பூரில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டுமென்றார்.
ஜி.எஸ்.டியில் பெரும் சீர்த்திருத்தம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதுவரை 5, 12, 18, 28 என 4 அடுக்காக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 5, 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே நடைமுறையில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது அமலுக்கு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறினால் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன்னுடைய சாதியை சொல்லி பலர் கிண்டல் செய்திருப்பதாகவும், ஆகையால் தன்னுடைய முதல் எதிரி சாதி தான் என MP கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்தும் தலைவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள், அவர்கள் களத்தில் இருக்கும் போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பிறப்பால் நாம் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை, தாழ்ந்தவனும் இல்லை என்றார்.
குட் பேட் அக்லியை தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் புதிய படம் ஒன்றை இயக்கயிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் விருது விழா மேடை ஒன்றில் AK 64 படம் குறித்து ஆதிக்கிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த அவர், குட் பேட் அக்லி ரசிகர்களுக்காக பண்ண திரைப்படம், AK 64 கண்டிப்பாக அனைவரும் என்ஜாய் பண்ணக்கூடிய படமாக இருக்கும் என கூறியுள்ளார். இத்தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
உறவினர் வீட்டில் ED ரெய்டு என்றால், ஓடிவந்து கூட்டணியில் சேர்வதற்கு நாங்கள் என்ன பழனிசாமியா என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களை மிரட்ட நினைப்பவர்கள் இன்று மிரண்டு போயிருப்பதாகவும் கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என எச்சரித்ததோமோ அதுவெல்லாம் நடப்பதாகவும், ஒத்துவராத எதிர்கட்சிகள் ED-யை கொண்டு மிரட்டப்படுவார்கள் என கூறியிருந்தோம் அதுவும் நடப்பதாக கூறினார்.
1934 – முரசொலி மாறன் பிறந்த தினம்.
1945 – ஜப்பானிடமிருந்து இந்தோனேசியா விடுதலை பெற்ற நாள்.
1947 – இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1962 – விசிக தலைவர் திருமாவளவன் பிறந்த தினம்.
1963 – திரைப்பட இயக்குநர் சங்கர் பிறந்த தினம்.
2008 – அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
Sorry, no posts matched your criteria.