news

News April 22, 2025

நீதிக்கட்சிக்கு முடிவே கிடையாது: ஸ்டாலின்

image

சென்னையில் நடைபெற்ற, ‘தமிழவேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழாவில் CM ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், நீதிக்கட்சிக்கு முடிவே கிடையாது, அக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி என்று பெருமைப்பட பேசினார். தற்போதைய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவான பி.டி.ராஜன், நீதிக்கட்சியின் கடைசி தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 22, 2025

கேது பெயர்ச்சி: பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்

image

மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.

News April 22, 2025

குழந்தை பெற்றால் ₹4.25 லட்சம்: டிரம்ப்பின் புதிய திட்டம்

image

அமெரிக்காவில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து வருவதால் கவலையடைந்த அதிபர் டிரம்ப், குழந்தை பெறுவதை ஊக்குவிக்க புதிய திட்டங்களை பரிசீலித்து வருகிறாராம். அதில் ஒன்று தான் பேபி போனஸ். அதன்படி, முதல் குழந்தை பெறும்போது பேபி போனஸ் $5,000-மும் (சுமார் ₹4.25 லட்சம்), இரண்டாவது குழந்தை பெற்றால் வரிச்சலுகையும் அளிக்க திட்டமாம். இந்த தொகைக்காக அமெரிக்கர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்வார்களா என்ன?

News April 22, 2025

ஒருத்தரையும் விடமாட்டோம்: PM சூளுரை

image

J&K-வில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி வன்மையாக கண்டித்துள்ளார். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கையை மேலும் வலிமைபடுத்துவோம் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

News April 22, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி & திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தென்காசி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று MET அறிவித்துள்ளது.

News April 22, 2025

ஹனிமூன் சென்றவர்களுக்கு… சோகம்!

image

கனவுகளுடன் கைப்பிடித்த இளம்தம்பதி, இனிய தொடக்கமாக காஷ்மீரின் பஹல்காமுக்கு ஹனிமூன் சென்றனர். காலம் முழுவதும் சேர்ந்திருக்க இணைந்த அவர்களை இப்பயணம் பிரிக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள். இருவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தபோது நுழைந்த தீவிரவாதிகள், கணவனை சுட்டுக் கொன்றனர். கண்ணெதிரே கணவன் உயிர் போனதை பார்த்த மனைவி பேச்சற்று கிடக்கிறார்… இதயத்தை துளைக்கிறது இந்த போட்டோ.

News April 22, 2025

புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!

image

J&k-ல் இன்று நடந்த தீவிரவாத தாக்குதல், முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பகுதிக்கு அருகே உள்ள பைஸ்ரீன் பள்ளத்தாக்கில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைச்சர் அமித்ஷா அப்பகுதிக்கு விரைந்துள்ளார்.

News April 22, 2025

LSG பேட்டிங்

image

LSG-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் இரு அணிகளும் வலுவாக இருக்கின்றன. இதனால், இன்றைய போட்டியில் சிக்சர் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 22, 2025

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல்.. அமித் ஷா கண்டனம்

image

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதலால் வேதனையடைந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடப்பட மாட்டார்கள் எனவும் அமித் ஷா கூறியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். உடனடியாக ஸ்ரீநகர் செல்லும் அமித் ஷா அங்கு முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

News April 22, 2025

தவெகவினருக்கு தலைமை உத்தரவு

image

2026 தேர்தலை நோக்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், விஜய்யின் வாகன பிரச்சாரத்திற்கு முன்னதாக, கொள்கை குறித்து கட்சி நிர்வாகிகள் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தலைமை உத்தரவிட்டுள்ளது. கட்சித் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தவெக கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!