India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வரும் மே 1-ம் தேதி முதல், ATM-ல் இருந்து பணம் எடுப்பதில் சில மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதாவது, கணக்கு வைத்திருக்கும் வங்கி ATM இல்லாமல், வேறு வங்கியின் ATMல் பணம் எடுத்தால், மாதத்தின் முதல் 3 முறை மட்டும் இலவசம். 4-வது முறையில் இருந்து பணம் எடுப்பதற்கு ₹19 பிடித்தம் செய்யப்படும். அதேபோல, வங்கி கணக்கு வைத்திருக்கும் ATM-லேயே 5 முறை மட்டுமே இலவசம். 6-வது முறையில் இருந்து ₹23 பிடிக்கப்படும்.
SBI வங்கி ஏடிஎம் கட்டண விதிகளை பிப்.1 முதல் மாற்றியமைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த விதியின்படி, SBI ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் 5 முறை SBI ஏடிஎம்களிலும், 10 முறை பிற ஏடிஎம்களிலும் இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். அதேநேரத்தில் சேமிப்பு கணக்கில் சராசரியாக ரூ.1 லட்சம் வைத்திருப்போருக்கு SBI மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் ஏடிஎம் பரிவர்த்தனை அன்லிமிடெட் இலவசமாகும். கட்டணம் வசூலிக்கப்படாது. SHARE IT
ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தற்போதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களின் அணுகுமுறை குறித்து CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் வேதனை தெரிவித்துள்ளார். கள சூழலை கவனிக்காமல், முதல் பந்திலேயே அவர்கள் அடித்து விளையாடுகிறார்கள் என்றும் அது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார். கிரிக்கெட்டை பேஸ்பால் போல விளையாடக்கூடாது என்றும் அவர் கடுமையாக பேசியுள்ளார். இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அமைச்சர் PTR அறிவார்ந்த வாதங்களை வைக்கக் கூடியவர் என்றும் அவரது சொல்லாற்றல் அவருக்கு பலமாக இருக்க வேண்டுமே தவிர பலவீனமாகி விடக்கூடாது என்றும் முதல்வர் பேசினார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்று அவருக்கு தெரியும் என்றும் முதல்வர் அழுத்தமாக குறிப்பிட்டார்.
தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலைவரும், EX MPயுமான வீரய்யா சௌத்ரி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓங்கோலில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, முகமூடி அணிந்த மூன்று பேர் உள்ளே நுழைந்து, கத்தியால் சராமரியாக குத்திக் கொலை செய்துள்ளனர். கொலை செய்தவர்கள் பீகாரை சேர்ந்த கும்பல் என கூறப்படுகிறது. ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சவுதி இளவரசர் அல்-வலீத் பின் காலித், 36 வயதை எட்டியுள்ளார். 19 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால், அவர் ‘தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்படுகிறார். 2005-ல் நடந்த விபத்தில் மூளையில் காயம் ஏற்படவே, சுயநினைவை இழந்தார். வெண்டிலேட்டர் துணையுடன், டாக்டர்களின் முழுநேர கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறார். 2019-ல், அவரது கை விரல்களும், தலையும் லேசாக அசைந்தன. அதையடுத்து எந்த முன்னேற்றமும் இல்லை.
முன்னாள் AUS கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டருக்கு இன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்றே விடுதலையும் செய்யப்பட்டார். குடும்ப வன்முறை, பெண்ணை பின் தொடர்ந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 2024 ஏப்ரலில் கஸ்டடியில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 375 நாள்கள் கஸ்டடி காலத்தில் அவர் ஒழுக்கமாகவும், விதிகளை பின்பற்றியதாகவும் கூறி அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
NEP என்றால் என்ன என்பதை மு.க.ஸ்டாலின் சரியாகப் படிக்க வேண்டும் என ஃபட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். NEP ஒருபோதும் மொழித் தேர்வை வலியுறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை. 3 மொழிகளில் ஆங்கிலத்தை தவிர வேறு 2 இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, மகராஷ்டிராவில் இந்திக்கு எதிர்ப்பு எழுந்ததை சுட்டிக்காட்டி ஃபட்னாவிஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.