India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஷ்மீரில் கொடூர செயலில் ஈடுபட்டவர்களை விட்டு வைக்க மாட்டோம் என சபதம் செய்த பிரதமர் மோடி, டெல்லி வந்திறங்கியதும் விமான நிலையத்திலேயே ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை, குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கேட்டறிந்தார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
நாதக வட சென்னை மாவட்ட தலைவர் உள்பட நாதக நிர்வாகிகள் ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்குவதால், பலர் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் நாதக வடசென்னை மாவட்ட தலைவர் அ. செல்வராஜ், மாவட்ட தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் சு.பாண்டியன், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் சென்னையில் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
IPL-லில் தொடர்ந்து சொதப்பி வரும் LSG அணி கேப்டன் ரிஷப் பண்டை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏலத்தில் ₹27 கோடிக்கு எடுக்கப்பட்ட பண்ட் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அந்த போட்டியிலும் லக்னோ தோல்வியை சந்தித்தது. நேற்றைய DC-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 7-வதாக களமிறங்கிய அவர் டக் அவுட்டாகினார். தோனியிடம் உள்ள போராட்ட குணம் கூட அவரிடம் இல்லை என ரசிகர்கள் சாடியுள்ளனர்.
1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட அவரது குடும்பத்தினரை விடுவித்து 2007-ம் ஆண்டு வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது. பகல்ஹாமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் கடற்படை அதிகாரி ஒருவரும், உளவுத்துறை அதிகாரி ஒருவரும் பலியாகினர். 3 தமிழர்கள் உள்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பொறுப்பேற்றுள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆதாரமற்ற <<16168585>>குற்றச்சாட்டுகளை<<>> முன்வைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் இந்த தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஏப்.23) காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வருகிற 28-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மூத்த ஹாலிவுட் நடிகர் வில் ஹட்சின் (94) காலமானார். 1957-61-ல் படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் அவர் நடித்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு நியூயார்க் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு 2 முறை திருமணங்கள் நடந்துள்ளன. இதில் முதல் மனைவிக்கு மட்டும் ஒரு மகள் உள்ளார். ஹட்சின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ TN அரசு அவசர எண்களை அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல், வாட்ஸ்அப்) எண்களில் தொடர்பு கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல் காஷ்மீர் சென்று ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொள்ள CM உத்தரவிட்டுள்ளார்.
இயக்குநர் தங்கர் பச்சானின் அண்ணன் செல்வராசுவின் பேத்தியான சரண்யா சரவணன், UPSC தேர்வில் 125-வது இடம்பிடித்து IAS-ஆக தேர்வாகியுள்ளார். கடலூர் பத்திரக்கோட்டையைச் சேர்ந்த சரண்யா, 4-வது முறையாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கு தங்கர் பச்சான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு IAS-ஆக 2 பேருடைய கண்ணீரையாவது துடைப்பேன் என நம்புவதாகவும் சரண்யா கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.