India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஜித், விஜய்க்கு நிகரான நடிகர் சூர்யா, சமீபகாலங்களில் பெரிய வெற்றியைக் கொடுக்க தடுமாறி வருகிறார். ரெட்ரோவுக்குப் பிறகு அவரின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன. தமிழின் RJ பாலாஜி, தெலுங்கின் வெங்கி அட்லூரியை(லக்கி பாஸ்கர்) தொடர்ந்து அடுத்ததாக மலையாளத்தின் ‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவனுடன் கூட்டணி சேர்கிறார் சூர்யா. பொங்கலுக்கு பிறகு படப்பிடிப்பு துவங்குகிறதாம்.
அலாஸ்காவில் நடந்த டிரம்ப் – புடின் சந்திப்பு பற்றி பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. டிரம்ப்பை சந்தித்தது புடின் அல்ல, அவரின் போலி (body double) என்பது அதிலொன்றாகும். டிரம்ப்பை சந்தித்த ‘புடின்’க்கு முகவாய்க்கட்டை சிறிதாக இருந்தது, ஒரிஜினல் கம்பீரம் இல்லை என்றும், ஊடக சந்திப்பில் டிரம்ப்பின் நடவடிக்கை வித்தியாசமாக நடந்து கொண்டதையும் குறிப்பிட்டு, அங்கு வந்தது ஒரிஜினல் புடின் இல்லையென்கின்றனர்.
*உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது முட்டை தான். இதில் வைட்டமின்கள் B5, B2, B12, B6, K, E, & D, கால்சியம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய நுண்சத்துகள் உள்ளன. *முட்டை நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. *புரதமும், பிற சத்துகளும் நிறைந்திருந்தாலும் குறைவான கலோரி கொண்டது. *உடனடி ஆற்றலை கொடுக்கும். இதிலுள்ள லூட்டின், வைட்டமின் A சத்துகள் பார்வை திறனை அதிகரிக்கும்.
அமைதியை நோக்கிய டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை பாராட்டுக்குரியது என இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது. பேச்சுவார்த்தை, தூதரக ரீதியில் மட்டுமே அமைதியை நோக்கி நகர முடியும் எனவும், உக்ரைன் பிரச்னை விரைவில் முடிவுக்கு வருவதை உலக நாடுகள் எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும், இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை இந்தியா முழுமனதாக வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.
2025 ஆசிய கோப்பை தொடருக்காக ஹர்பஜன் சிங் தனது உத்தேச அணியைத் தேர்வு செய்துள்ளார். *ஓபனிங் பேட்ஸ்மென்: ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, கில். *மிடில் ஆர்டர்: SKY, பாண்ட்யா, ஸ்ரேயஸ், ரியான் பராக். *கீப்பர்: கே.எல்.ராகுல் / ரிஷப் பண்ட். *ஆல்ரவுண்டர்: வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல். *பவுலர்கள்: குல்தீப், முகமது சிராஜ், பும்ரா, அர்ஷ்தீப் சிங். இதில் சஞ்சு சாம்சன் இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து <<17427101>>தேர்தல் ஆணையம்<<>> விளக்கம் அளித்துள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க கால அவகாசம் கொடுத்த போது, எந்த கட்சியும் கவலைகள் தெரிவிக்கவில்லை எனவும், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் உதவியுடனே வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
A.R.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் இசைவெளியீட்டு விழா ஆக.24-ம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும், அதே மேடையில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூலி படத்துக்கு பிறகு வெளியாகும் அடுத்த பெரிய படம் இது என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
புடின் உடனான பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் அமைதி நிலவும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், NATO பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனைத்தும் நன்றாக நடக்கும் பட்சத்தில் ஜெலன்ஸ்கி விரைவில் புடினை சந்திப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு வரும் 19-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், வேட்பாளருக்கான உத்தேச பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், JP நட்டா, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், டெல்லி கவர்னர் சக்சேனா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்விரத், Ex CM கர்பூரி தாக்கூரின் மகன் ராம் நாத் தாக்கூர் ஆகியோர் பெரும் பட்டியலில் உள்ளதாம்.
தலைமை செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்கு செல்லும் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டதை EPS விமர்சித்துள்ளார். உத்தமர் என கூறிக்கொள்ளும் நீங்கள், அறையை திறந்துவிடுங்கள் எனவும், எந்த தவறும் செய்யவில்லை என்றால் ஏன் அறையை பூட்டு போட்டு பூட்டி வைக்கிறீர்கள் என்றும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் இன்று ED ரெய்டு நடத்தியது.
Sorry, no posts matched your criteria.