news

News March 16, 2025

தமிழ் மொழியை புகழ்ந்த அஸ்வினி வைஷ்ணவ்

image

தமிழ் இனிமையான மொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். சென்னை அருகே பண்ணூரில் பேசிய அவர், மொழியை வைத்து பாஜக அரசியல் செய்ய விரும்பவில்லை என்றார். தமிழ் மொழி வரலாற்று தொன்மை உடையது என்பதை ஏற்பதாகவும், உலக சொத்துக்களில் ஒன்றாக தமிழ் இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

News March 16, 2025

சிக்கன் விலை உயர்ந்தது

image

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) ₹2 உயர்ந்து ₹104ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ ₹10 வரை உயர வாய்ப்புள்ளது. முட்டை கொள்முதல் விலை 380 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ₹65 ஆகவும் நீடிக்கிறது.

News March 16, 2025

ராகுல் அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி

image

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3 மாதங்களில் 2ஆவது முறையாக அவர் வியட்நாம் செல்வதாகவும், புத்தாண்டு கொண்டாட சென்ற ராகுல் அங்கு 22 நாள்கள் இருந்ததாகவும் விமர்சித்துள்ளார். தனது தொகுதிக்கு கூட செல்லாமல் ராகுல் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து செல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

News March 16, 2025

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த முன்னணி நடிகை

image

தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த சமந்தா தற்போது ஹிந்தி வெப் சீரிஸிலும் அசத்தி வருகிறார். இதனிடையே ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய சமந்தா, ‘சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்துள்ளனர். படம் மீது மிகுந்த நம்பிக்கையில் உள்ள சமந்தா விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

மகளிர் உரிமைத் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்

image

மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், யார் எல்லாம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. * புதிதாக திருமணம் ஆகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், * கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள், *தவறான காரணங்களால் பெயர் விடுபட்டவர்கள், *அரசு அல்லாத சில கூட்டுறவு ஊழியர்களின் மனைவிகள் உள்ளிட்டோர் ₹1000 பெற விண்ணப்பிக்கலாம்.

News March 16, 2025

பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: மெக்வால்

image

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை அறிமுகப்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் மெக்வால் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசிய நலனுக்கானது, அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 1952, 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற, சட்டசபைத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2025

Hat-trick தோல்வி.. தொடரும் DC-யின் சோகக்கதை

image

WPL-லின் முதல் சீசனிலிருந்தே சிறப்பாக விளையாடி வரும் டெல்லி அணி இறுதி போட்டியில் மட்டும் ஏனோ சொதப்பிவிடுகிறது. 2023ல் மும்பை அணியிடமும், 2024ல் பெங்களூருவிடமும் கோப்பையை பறிகொடுத்த டெல்லி, நேற்று மீண்டும் மும்பையிடம் வீழ்ந்தது. IPL-லில் தான் டெல்லி அணியால் சாம்பியன் ஆக முடியவில்லை என்றால் WPL-லிலும் அதே சோகம் தொடர்கிறது. DC-யின் புதிய கேப்டன் அக்‌ஷர் பட்டேல் கோப்பையை வெல்வாரா?

News March 16, 2025

அதிகாலையில் கோர விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலி

image

விழுப்புரத்தில் பைக் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. செஞ்சியை அடுத்த வல்லம் தொண்டி ஆறு அருகே, இன்று அதிகாலை பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, துடிதுடித்து உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து உடனே எந்த தகவலும் வெளியாகவில்லை.

News March 16, 2025

பாஜக, மீடியாக்களை சாடிய லாலு மகன்

image

டான்ஸ் ஆடு, இல்லனா சஸ்பெண்ட் என போலீஸ்காரரை லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் மிரட்டியது கண்டனத்துக்குள்ளானது. இந்தச் சூழலில் சகோதரத்துவ விழாவுக்கு கூட வெறுப்புணர்வு சாயம் பூசுவதா என பாஜகவையும், RSSஐயும் தேஜ் பிரதாப் விமர்சித்துள்ளார். எலும்பு துண்டுக்காக மீடியாக்களும் அவர்கள் பின்னால் செல்வதாக X பக்கத்தில் அவர் வெளியிட்ட கார்ட்டூன் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2025

IPL-க்கு நிதிஷ் ரெட்டி தயார்.. கிடைத்தது கிரீன் சிக்னல்

image

இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்தார். இதனையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி நடைமுறைகளை பெங்களூருவில் உள்ள NCA-வில் அவர் மேற்கொண்டார். தற்போது அவர் முழு உடல் தகுதி பெற்றதாக மருத்துவக் குழு தெரிவித்ததையடுத்து, IPL போட்டி விளையாடுவதற்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது. விரைவில் SRH-வுடன் நிதிஷ் இணைகிறார்.

error: Content is protected !!