India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ, டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள
சமூகவலைதள பதிவில், “வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்கும்படி அனைத்து இளம் வாக்காளர்களையும் கேட்டு கொள்கிறேன். தேர்தலில் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள்” எனக் கேட்டு கொண்டுள்ளார்.

ஆந்திர சட்டசபை தேர்தலில், நகரி தொகுதியில் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் களம் இறங்குகிறார். நகரி தொகுதியில் ரோஜா 3வது முறையாக போட்டியிடுகிறார்.

டெல்லியில் உள்ள ஓட்டலில் வழங்கப்பட்ட தோசையில் 8 கரப்பான்பூச்சிகள் கிடந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் தோசை வாங்கியபோது, அதில் குட்டி குட்டியாக 8 கரப்பான்பூச்சிகள் கிடந்துள்ளன. இதை வீடியோவாக அவர் செல்போனில் பதிவு செய்ததை கண்ட ஊழியர்கள், தோசையை எடுத்து சென்றுவிட்டனர். வீடியோவை இணையதளத்தில் பெண் வெளியிட்டதுடன், காவல்துறையிலும் புகார் அளிக்கவே, விசாரணை நடக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தை தனியாக பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் விவாதம் கிளம்பியது. தற்போது அதேபோல், தென் மாவட்ட மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப்படுவதால், மதுரையை தலைமையிடமாக (திருச்சி-குமரி வரை) தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் பதிவு புதிய சர்ச்சை கிளப்பியிருக்கிறது.

மேற்குவங்க எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் சம்பளம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபையில் கடந்த ஆண்டு நிறைவேறிய சம்பள உயர்வு தொடர்பான மசோதாக்களுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து எம்எல்ஏக்கள் சம்பளம் ரூ.10,000ல் இருந்து ரூ.50,000ஆகவும், அமைச்சர்களின் சம்பளம் ரூ.10,900ல் இருந்து ரூ.50,900ஆகவும், கேபினட் அமைச்சர்களின் சம்பளம் ரூ.51,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்க இந்த சீசனில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இலங்கை அணியில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்த தகவல் மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நவீன உளவுக்கப்பலை சீனா வழங்கியிருப்பது, இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா நடத்தும் பேலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை தனது உளவுக்கப்பல்கள் மூலம் சீனா கண்காணித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கும் அதேபோன்ற உளவுக்கப்பலை சீனா அளித்துள்ளது. இது 87 மீட்டர் நீளமுடையது. இந்தியாவிடம் இதைவிட பெரிதாக 175 மீட்டர் நீள நவீன உளவுக்கப்பல் உள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், முதல்கட்டத் தேர்தல் 19ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் 26ஆம் தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமியர்கள் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படும் என இந்திய முஸ்லீம் லீக் கட்சி கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் மசூதிகளுக்கு செல்வார்கள் என்பதால் தேதியை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என மிரட்டல் விடுத்து முன்னாள் அதிபர் டிரம்ப் பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், ” அதிபர் தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் ரத்த ஆறு ஓடும்” என்றார். 2020ம் ஆண்டு தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.